தனுஷ் காதில் விழுமா?

Bookmark and Share

தனுஷ் காதில் விழுமா?

தனுஷ் நடித்த மாரி படம் அண்மையில் வெளியாகி கமர்ஷியலாக வெற்றியடைந்துள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் மாரி படத்தில் பணியாற்றியவர்களை தன் வீட்டுக்கே அழைத்து தங்கச்சங்கிலி பரிசளித்தார் தனுஷ். மாரி படக்கலைஞர்களுக்கு தங்கச்சங்கிலி பரிசு கொடுத்த தனுஷ் மீது தற்போது ஒரு விமர்சனம் கிளம்பியுள்ளது.

தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் சிறிய பட்ஜெட்டில் உருவாகி, சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வசூலைக் குவித்த படம் - காக்கா முட்டை.  புதுமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படம் ரிலீசாவதற்கு முன்பே பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளைக் குவித்தது. ஜூன் 5- ஆம் தேதி வெளியான  காக்கா முட்டை படம் நல்ல வசூலையும் தந்தது.

சுமார் 15 கோடிக்கு மேல் வசூல் செய்த இப்படம் இன்று 50 ஆவது நாளைத்தொட்டு, இன்னமும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.  காக்கா முட்டை படத்தைத் தயாரித்த தனுஷ் அப்படத்தில் நடித்த சிறுவர்களின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தார்! இப்போது மாரி படத்தின் கலைஞர்களுக்கு தங்கச்சங்கிலி பரிசளித்த காரணத்தினாலோ என்னவோ, காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களுக்கு கல்வி செலவு என்பது சின்ன தொகைதான் வரும்.

அதற்கு பதில் அவர்களுக்கு வீடு வாங்கிக் கொடுக்கலாமே என்ற அபிப்ராயங்கள் சொல்லப்படுகின்றன. தனுஷ் காதில் விழுந்து அந்த இரண்டு சிறுவர்களுக்கும் நல்லது நடந்தால் சரி..!

 


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions