இயக்குநராகும் தனுஷ்!

Bookmark and Share

இயக்குநராகும் தனுஷ்!

இயக்குநர் நடிகர் ஆவதும் நடிகர் இயக்குநர் ஆவதும் தமிழ்ச் சினிமாவில் இன்று சகஜம் போலும்.  தனுஷ் நடிக்க வேல்ராஜ் இயக்கிய வேலையில்லா பட்டதாரி சுவாரஸ்யமான கமர்ஷியல் படம் என்று பேசப்பட்டது ,வணிக ரீதியில் வெற்றியும் பெற்றது. அதைத் தொடர்ந்து தனுஷ் - வேல்ராஜ் கூட்டணியில் அடுத்த படத்தை உடனடியாகத் தொடங்கினார்கள். 

வேலையில்லா பட்டதாரி2 என்று இப்போதைக்கு சொல்லப்படும் அப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடையும் நிலையில் இருக்கிறது. முதல் படத்தில் ஒளிப்பதிவு இயக்கத்தைக் கவனித்து முழுமூச்சாக ஈடுபட்ட வேல்ராஜ், அடுத்த படத்தை  தொடங்கிய போது ஆரம்பத்தில் வந்தவர் பிறகு கண்டு கொள்ளவில்லை. 

இருவருக்கும் மனஸ்தாபம் அதனால்தான் வேல்ராஜ் விலகிக் கொண்டதாகவும் பேச்சு வந்தது. இதை வேல்ராஜ் மறுத்தாலும் இதில் உண்மை இல்லாமல் இல்லை. பாயும்புலி படத்துக்கு ஒளிப்பதிவாளராக வேலைபார்க்கப் போய்விட்டார். ஒரு படத்தை இயக்குவர் மாபெரும் பொறுப்புள்ள பணியை விட்டுவிட்டு ஒளிப்பதிவாளராகப் போவாரா? காரணம் முதல் படத்தில் அடக்கி வாசித்த தனுஷ் இதில் தலையிட ஆரம்பித்ததுதானாம்.

வேல்ராஜ் இல்லாமல் படத்தின் பெரும் பகுதியை இயக்கியது தனுஷ்தானாம். மனைவி ஐஸ்வரியாவைத் தொடர்ந்து தனுஷையும் விரைவில் இயக்குநராக பார்க்கலாம். 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions