நடிகர் தனுஷ்-க்கு உரிமை கொண்டாடும் தம்பதிகள்: நேரில் ஆஜராஜ மேலூர் நீதிமன்றம் உத்தரவு

Bookmark and Share

நடிகர் தனுஷ்-க்கு உரிமை கொண்டாடும் தம்பதிகள்: நேரில் ஆஜராஜ மேலூர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தனர். அதில், தங்களுக்கு 3-வது மகனாக பிறந்த மகன் தனுஷ் என்றும், பதினொன்றாம் வகுப்பு பயின்ற போது அவர் சென்னைக்கு ஓடி விட்டதாக தெரிவித்து இருந்தனர். 

மேலும் அந்த மனுவில், “பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் திரைப்படத்தில் நடிப்பதாக கேள்விப்பட்டு அவரை பார்க்க முயற்சித்தோம், ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. தற்போது உடல்நிலை சரியில்லாமலும் ஏழ்மை நிலையில் இருப்பதால் மாதம் 65 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்”  என குறிப்பிட்டிருந்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வக்குமார், ஜனவரி மாதம் 12 ஆம் தேதி திரைப்பட நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.வழக்கு தொடர்ந்துள்ள கதிரேசன் சிவகங்கை அரசு போக்குவரத்து பனிமனையில் பணிபுரிந்து வருகிறார். 


Post your comment





Related News
தனுஷ் யாருடைய பிள்ளை- வழக்கில் புதிய திருப்பம்
அனிருத், தனுஷை சேர்த்து வைக்கப் பார்க்கிறாரா ரஜினிகாந்த்?
ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?
பவர் பாண்டி படத்தின் பெயர் மாற்றம்
நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி
தனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்?
`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்
`பவர்பாண்டி' படத்தின் ஆன்மாவே ஷான் ரோல்டனின் இசைதான்: தனுஷ்
அப்பாவைப் போல என்னை மீண்டும் கதாநாயகனாக்கிய என் மருமகன் தனுஷ்! - ராஜ்கிரண் நெகிழ்ச்சி
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions