தனுஷை தடுமாற வைத்த கேள்வி!

Bookmark and Share

தனுஷை தடுமாற வைத்த கேள்வி!

தனுஷின் சினிமா கேரியரில் 3 படத்தில் அவர் எழுதி பின்னணி பாடி நடித்த ஒய் திஸ் கொலவெறி பாடல் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அந்த பாடல் ஒலித்தது.

குறிப்பாக, எனது பேவரைட் பாடல்களில் ஒய் திஸ் கொலவெறியும் ஒன்று என இந்திய சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சனே மனம் திறந்து பாராட்டியிருந்தார். ஆக, அந்த ஒரு பாடலின் மூலமே பாலிவுட்டிலும் நுழைந்த தனுஷ், பின்னர் ஷமிதாப் படத்தில் அமிதாப்புடனும் இணைந்து நடித்து விட்டார்.

அந்த அளவுக்கு தனுஷின் புகழ் பரப்பிய பாடல் அது. இந்த புகழில் இசையமைப்பாளர் அனிருத்துக்கு பெரும் பங்கு உண்டு. இந்த நிலையில், தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் அனேகன் படத்தில் இடம்பெற்றுள்ள டங்காமாரி ஊதாரி -என்ற பாடலும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

அதனால், தனுஷிடம், நீங்கள் பாடி மெகா ஹிட்டான பாடல்களான ஒய் திஸ் கொலவெறி, டங்காமாரி இரண்டில் எது உங்களுக்கு அதிகம் பிடித்த பாடல் என்று கேட்டால், எந்த பாடலை சொல்வது என்பது புரியாமல் தடுமாறிப்போகிறார்.

அதையடுத்து இரண்டுமே பிடித்த பாடல்தான் என்று சொல்லி நழுவிக்கொள்கிறார். காரணம், அவரைப்பொறுத்தவரை இரண்டுமே சூப்பர் ஹிட்தான். ஆனால், ஒய்திஸ் கொலவெறிதான் உலக அளவில் ஹிட்டான பாடல். அந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

ஆனால் டங்காமாரிக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஒருவேளை கொலவெறி பாடலை பிடித்தமானதாக சொன்னால் ஹாரிஸ் ஜெயராஜ் பீல் பண்ணுவாரே என்பதற்காகத்தான் இப்படி ரெண்டு பாடல்களையுமே பிடித்தமானதாக சொல்லி வருகிறார் தனுஷ்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions