இயக்குனரை ரெயில் என்ஜின் டிரைவராக்கிய தனுஷ்: புதிய தகவல்

Bookmark and Share

இயக்குனரை ரெயில் என்ஜின் டிரைவராக்கிய தனுஷ்: புதிய தகவல்

தனுஷ் தற்போது கோலிவுட், பாலிவுட்டையும் தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளார். இவரை வைத்து படம் இயக்க பல முன்னணி இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவர் தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் ‘மிரட்டு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், ‘கொடி’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

தனுஷ் நடித்துள்ள ‘மிரட்டு’ படம் முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இதில் தனுஷ் ரெயில்வேயில் பணிபுரியும் சமையல்காரராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தில் ரெயில் இன்ஜின் டிரைவராக பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கதையோடு பயணிக்கும்படியான முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். ‘மிரட்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் ‘கிழக்கு வாசல்’, ‘சின்ன கவுண்டர்’, ‘சிங்கார வேலன்’, ‘எஜமான்’ உள்ளிட்ட படங்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions