தூசு தட்டப்படும் தனுஷ் படங்கள்

Bookmark and Share

தூசு தட்டப்படும் தனுஷ் படங்கள்

தனுஷ் நடித்த சில படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ஓரளவிற்கு வசூலானதைத் தொடர்ந்து அவருடைய பழைய படங்கள் அனைத்தையும் இப்போது தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட தூசு தட்ட ஆரம்பித்துள்ளார்களாம்.

'வேலையில்லா பட்டதாரி' படம் 'ரகுவரன் பி.டெக்' என்ற பெயரில் டப்பிங் ஆகி வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து 'அனேகன்' படத்தையும் 'அனேகடு' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டனர், அந்த படமும் கொஞ்சம் வசூலானது.

இப்போது தனுஷுக்கு தெலுங்கிலும் ஒரு சிறிய மார்க்கெட் ஓபனாகி இருப்பதால் அவருடைய பழைய படங்களையெல்லாம் தெலுங்கில் ரிலீஸ் செய்து வசூலை அள்ள பல தயாரிப்பாளர்கள் முன் வந்திருக்கிறார்களாம்.

அதனால், தனுஷ் நடித்து இங்கு ஓடிய, ஓடாத படங்கள் என்னவென்று கணக்கெடுக்கும் பணியையும் ஆரம்பித்து விட்டார்களாம். ஏற்கெனவே, தனுஷ் ஹிந்தியில் 'ராஞ்சனா' மூலம் அறிமுகமாகி பாலிவுட்டிலும் புகழ் பெற்ற பிறகு அவருடைய பல தமிழ்ப் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து சாட்டிலைட் டிவிக்களில் ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள்.

விரைவில், தனுஷ் நடித்த படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர ஆரம்பிக்கும். தனுஷுக்குத் தெலுங்குதான் தாய் மொழி என்பதால் அவர் நேரடித் தெலுங்குப் படத்தில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions