பஞ்ச் டயலாக்குகளை கத்தரிக்கும் தனுஷ்!

Bookmark and Share

பஞ்ச் டயலாக்குகளை கத்தரிக்கும் தனுஷ்!

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி என காதல் கதைகளாக நடித்தபோது ஓவராக பஞ்ச் டயலாக்குகளில் கவனம் செலுத்தவில்லை தனுஷ்.

ஆனால், திடீரென ஆக்சன் கதைகளில் நடிக்கத் தொடங்கியபோது தனது ஒல்லிகுச்சி உடம்பை வைத்துக்கொண்டு பத்து பதினைந்து ரவுடிகளையெல்லாம் புரட்டி எடுத்தார்.

அதோடு, பார்க்கத்தான் நான் சுள்ளான், சூடான்னா சுளுக்கு எடுத்துடுவேன்,  நாங்களெல்லாம் சுனாமியிலேயே சும்மிங் போறவங்க -என்று சில படங்களில் பஞ்ச் டயலாக்குகளை பேசி நடித்தார். அப்படி தனுஷ் பேசிய டயலாக்குகள் இளவட்டங்கள் மத்தியிலும் பெருசாக ரீச் ஆனது.

ஆனால், சமீபகாலமாக அவருக்கு பஞ்ச் டயலாக்குகளில் பெரிதாக ஈடுபாடு இல்லையாம். காரணம், தற்போது மெச்சூரிட்டியான கதைகளாக நடிக்க ஆசைப்படும் தனுஷ், அந்த கதைகளுக்கேற்ற டயலாக்குகளை மட்டுமே பேசி நடிக்க விரும்புகிறாராம்.

தேவையில்லாத பில்டப் கொடுக்கும் பஞ்ச் டயலாக்குகளை தவிர்க்கிறாராம். அந்த வகையில், யாராவது இயக்குனர்கள் சும்மா இருந்து விட்டுப் போகட்டும் என்று சந்தடி சாக்கில் பஞ்ச் டயலாக்குகளை திணித்தால்கூட தான் நடிக்கும் போது அவற்றை கத்தரித்து விட்டே நடிக்கிறாராம் தனுஷ். ஒரு காலத்தில் பஞ்ச் டயலாக் கேட்டு வாங்கிய தனுஷின் இந்த மாற்றம் இயக்குனர்களை ஆச்சர்யப் படுத்தியுள்ளது.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions