ஒரே மாதத்தில் 2 படங்கள் ரிலீஸ்! நெகிழ்ச்சியில் தனுஷ்!!

Bookmark and Share

ஒரே மாதத்தில் 2 படங்கள் ரிலீஸ்! நெகிழ்ச்சியில் தனுஷ்!!

சினிமா உலகைப்பொறுத்தவரை எத்தகைய முன்னணி ஹீரோக்களாக இருந்தாலும் அவர்கள் நடித்த படம் ஒரே மாதத்தில் வெளியாவது எனபது அரிதான விசயம்தான்.

ஒரு படம் வெளியாகி அடுத்த இரண்டொரு மாதங்களுக்கு பிறகுதான் அடுத்த படத்தை வெளியிடுவார்கள். ஆனால், தனுஷ் தற்போது நடித்துள்ள ஷமிதாப், அனேகன் என்ற இரண்டு படங்களுமே பிப்ரவரியில் வெளியாகிறது. தற்போதைய நிலவரப்படி அஜீத்தின் என்னை அறிந்தால் பிப்ரவரி 5-ந்தேதியில் வெளியாக இருக்கிறது.

அதற்கடுத்த நாள் அமிதாப்பச்சனுடன் இணைந்து தனுஷ் நடித்துள்ள ஷமிதாப் வெளியாகிறது. ஆனால் அப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் அதாவது பிப்ரவரி 13-ந்தேதியே அனேகன் வெளியாகிறது.

ஆக, ஒரே வாரத்திற்குள் அடுத்த படமும் வெளியாவதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷ், எனது சினிமா பயணத்தில் இப்படி அடுத்தடுத்து நான் நடித்த படங்கள் வெளியாவது இதுவே முதல்முறை.

அதோடு, இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் நான் நடித்திருக்கிறேன் என்பது இன்னும் மகிழ்ச்சியான விசயம். அந்த வகையில் என்வாழ்க்கையில் மறக்க முடியாத தருணத்தில் இப்போது நான் இருக்கிறேன் என்று தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார் தனுஷ். 


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions