தனு வெட்ஸ் மானு-3 : தனுஷ் ஹீரோ!

Bookmark and Share

தனு வெட்ஸ் மானு-3 : தனுஷ் ஹீரோ!

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மாதவன்-கங்கனா நடிப்பில் வௌியான படம் தனு வெட்ஸ் மானு. இப்படம் சூப்பர் ஹிட்டானது. அதனைத்தொடர்ந்து தனு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் என அதன் இரண்டாம் பாகம் கடந்தவாரம் வெளியானது.

இந்தப்படமும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சானை படைத்து கொண்டிருக்கிறது. விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் சேர இருக்கிறது. இந்நிலையில் ஆனந்த், தனு வெட்ஸ் மானு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும், அதில் ஹீரோவாக மாதவனுக்கு பதில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம் ஹீரோயினாக கங்கனாவே தொடர்வார் என்கிறார்கள். தனுஷ் முதன்முதலில் இந்தியில் அறிமுகமானது ஆனந்த் எல்.ராய் இயக்கிய ராஞ்சனா படத்தில் தான். முதல்படமே தனுஷூக்கு இந்தியில் ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது.

தொடர்ந்து ஷமிதாப் படத்தில் அமிதாப் பச்சன் உடன் நடித்தார். தற்போது தமிழ் படங்களில் நடித்து வரும் தனுஷ், விரைவில் இந்தி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அது தனு வெட்ஸ் மானு-3 ஆக இருக்கலாம் என்கிறார்கள்.

 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions