கால்பந்து தூதராக நடிகர் தனுஷ்!

Bookmark and Share

கால்பந்து தூதராக நடிகர் தனுஷ்!

இந்தியாவில் நடபெறவுள்ள 8 அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) பல்வேறு நகரங்களில் வருகிற 3-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த சீசனுக்கான போட்டியின் விளம்பர தூதராக நடிகர் தனுஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தனுஷ் கூறியதாவது, “இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே நான் கால்பந்து ரசிகன். கால்பந்து ஆட்டங்களை ரசித்து பார்ப்பேன். 

சிறுவயதில் தெருக்களில் கால்பந்து விளையாடி இருக்கிறேன். 90 நிமிடங்கள் விறுவிறுப்பாக அரங்கேறும் கால்பந்து ஆட்டம் எல்லோருக்கும் பிடித்தமானதாகும்.

இந்த ஆண்டில் நிறைய திறமையான புதிய வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளதால் இந்த ஐ.எஸ்.எல் சீசன் கடந்த ஆண்டை விட விறுவிறுப்பாக இருக்கும்.

நமது நாட்டில் கிரிக்கெட் ஆட்டம் தான் பிரபலமாக விளங்குகிறது. இந்த போட்டியின் மூலம் கால்பந்து ஆட்டம் நிச்சயம் பிரபலம் அடையும்”. இவ்வாறு தனுஷ் கூறினார். 


Post your comment





Related News
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions