மனைவி ஐஸ்வர்யாவுடன் கருத்து வேறுபாடா?: தனுஷ் விளக்கம்

Bookmark and Share

மனைவி ஐஸ்வர்யாவுடன் கருத்து வேறுபாடா?: தனுஷ் விளக்கம்

தனுஷ் தமிழ் இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ‘அனேகன்’ மற்றும் இந்தியில் நடித்த ‘ஷமிதாப்’ படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன. இந்த நிலையில் தனுசுக்கும் அவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி உள்ளன.

இதற்கு தனுஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:– என்னை அழகாக மாற்றியவர் ஐஸ்வர்யா, அது மட்டுமின்றி வீட்டில் என் குடும்பத்தினரையும் நன்றாக கவனித்து கொள்கிறார்.

ஐஸ்வர்யா, எனது குழந்தைகள் சகோதரர், தந்தை உள்ளிட்டோருடன் சேர்ந்து வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிசியாக நடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது அமைதியும், சந்தோஷமும் கிடைக்கிறது.

தொழில் ரீதியாக என்னால் அடிக்கடி வீட்டில் இருக்க முடியாது. அப்போது ஐஸ்வர்யா குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களை பார்த்துக் கொள்கிறார். இதைவிட நான் என்ன எதிர்பார்க்க முடியும்.

ஐஸ்வர்யா துணிச்சலான பெண். அதோடு அழகான நல்ல தாயாகவும் இருக்கிறார். என் தாயிடமும் பாராட்டு பெற்றுள்ளார். எனது மூத்த மகனுக்கு எட்டு வயது. இளைய மகனுக்கு ஆறு வயது ஆகிறது. அவர்கள் என்னை மாதிரி இருக்கிறார்கள்.

நான் நடித்த சந்தோஷமான படங்களை அவர்களை பார்க்க வைப்பேன். சோகமாக முடியும் படங்களை காட்டுவது இல்லை. நான் பெருமைபடும்படி எதிர்காலத்தில் அவர்கள் வாழ்க்கை அமையும்.

இவ்வாறு தனுஷ் கூறினார். 


Post your comment





Related News
தனுஷ் ஐஸ்வர்யாவால் சினிமா கலைஞருக்கு கிடைத்த அங்கீகாரம்!
என்னது தனுஷா இந்த படத்தில் நடிக்கின்றார்? ரசிகர்கள் குழப்பம்
இதுல எனக்கென்ன வேலை இருக்கு – தனுஷை வறுத்தெடுத்த ஐஷ்வர்யா ராய்!
மனைவியை கண்டுகொள்ளாத தனுஷ் – என்ன காரணம்?
தனுஷுடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய் – காரணம் இதுதான்!
ஒரே கான்செப்ட்டில் படம் எடுக்கும் தனுஷ், ஐஸ்வர்யா!
ஐஸ்வர்யா படத்தில் மீண்டும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் தனுஷ்!
தனுஷ் படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குவாரா?
ஃபெட்னா தமிழ் விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா, ஏமி ஜாக்சன் பங்கேற்பு
மனைவியுடன் அமெரிக்கா செல்கிறார் நடிகர் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions