மனைவியுடன் அமெரிக்கா செல்கிறார் நடிகர் தனுஷ்

Bookmark and Share

மனைவியுடன் அமெரிக்கா செல்கிறார் நடிகர் தனுஷ்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 28வது ஆண்டு விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஜோஸ் நகரில் வரும் ஜூலை மாதம் 2ம் திகதி முதல் 5ம் திகதி வரை (ஜூலை 2-5) நடக்கவுள்ளது.  வட அமெரிக்கத் தமிழர்களின் முகமாகவும், குரலாகவும் விளங்குவது பெட்னா என அழைக்கப்படும் இந்தப் பேரவை. கடந்த சுமார் 28 ஆண்டுகளாகத் தமிழினத்துக்குப் பேரவை ஆற்றியிருக்கும் பணிகள் அளப்பரியன.

தமிழ் விழாவோடு சேர்த்து இசைப் பேரறிஞரர் வீ.ப. கா. சுந்தரம் நூற்றாண்டு விழா மற்றும் பாபநாசம் சிவன் 125வது ஆண்டு விழாவும் நடாத்தப்படுகிறது.

இவ்நிகழ்ச்சியில் இந்த ஆண்டு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், நடிகை ஏமி ஜாக்சன் மற்றும் தி. உதயசந்திரன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், பாடகி முனைவர் சௌம்யா, பாடகி பூஜா, பாடகர் ஹரிசரன், பேச்சாளர் சுமதிஸ்ரீ, எழுத்தாளர் பூமணி, பாடகி பிரகதி, கும்கி புகழ் மகிழினி மணிமாறன், முனைவர் மார்கரெட் பாஸ்டன், பாடகர் திவாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

விழா குறித்த தகவல்களை www.FeTNA.org என்ற இணையதளத்தில் காணலாம். 


Post your comment





Related News
தனுஷ் ஐஸ்வர்யாவால் சினிமா கலைஞருக்கு கிடைத்த அங்கீகாரம்!
என்னது தனுஷா இந்த படத்தில் நடிக்கின்றார்? ரசிகர்கள் குழப்பம்
இதுல எனக்கென்ன வேலை இருக்கு – தனுஷை வறுத்தெடுத்த ஐஷ்வர்யா ராய்!
மனைவியை கண்டுகொள்ளாத தனுஷ் – என்ன காரணம்?
தனுஷுடன் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய் – காரணம் இதுதான்!
ஒரே கான்செப்ட்டில் படம் எடுக்கும் தனுஷ், ஐஸ்வர்யா!
ஐஸ்வர்யா படத்தில் மீண்டும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் தனுஷ்!
தனுஷ் படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குவாரா?
தமன்னாவுக்கு 9வது இடம்; இணைய தள தேடலில்
ஃபெட்னா தமிழ் விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா, ஏமி ஜாக்சன் பங்கேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions