ஃபெட்னா தமிழ் விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா, ஏமி ஜாக்சன் பங்கேற்பு

Bookmark and Share

ஃபெட்னா தமிழ் விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா, ஏமி ஜாக்சன்  பங்கேற்பு

வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை(ஃபெட்னா) நடத்தும் தமிழ் விழாவில் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் கலந்து கொள்ள உள்ளார். வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை(ஃபெட்னா), சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்தும் தமிழ் விழா 2015 அதாவது 28வது ஃபெட்னா வருடாந்திர கூட்டம் வரும் ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு நடக்க உள்ளது.

இந்த தமிழ் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஜோஸ் நகரில் இருக்கும் நேஷனல் சிட்டி சிவிக் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழ் விழாவோடு சேர்த்து இசைப் பேரறிஞரர் வீ.ப. கா. சுந்தரம் நூற்றாண்டு விழா மற்றும் பாபநாசம் சிவன் 125வது ஆண்டு விழாவும் நடத்தப்படுகிறது.

விழாவில் நடிகர் தனுஷ், அவரது மனைவியும் இயக்குனருமான ஐஸ்வர்யா, நடிகை ஏமி ஜாக்சன், பாடகி முனைவர் சௌமியா, கவிஞர் சுமதிஸ்ரீ, சூழலியலாளர் பூ உலகின் நண்பர்கள் சுந்தரராஜன், கலைக்காவிரி கல்லூரியின் முதல்வர் முனைவர் மார்கரெட் பாஸ்டின், உதயசந்திரன் ஐஏஎஸ், பாடகி மகிழினி மணிமாறன், பேராசிரியர் கவிமாமணி அப்துல் காதர், எழுத்தாளர் பூமணி, முனைவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions