தனுஷ் பட வழக்கு: தணிக்கை குழுவை அணுகி தீர்வு காணலாம்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Bookmark and Share

தனுஷ் பட வழக்கு: தணிக்கை குழுவை அணுகி தீர்வு காணலாம்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்டநாயனார் மகாசபை தலைவர் எஸ்.மாரிச் செல்வம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து, வருகிற 13–ந்தேதி (நாளை மறுநாள்) வெளிவர இருக்கும் திரைப்படம் ‘அனேகன்’. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படத்தில் வண்ணார் சமுதாயத்தை சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தை தணிக்கை செய்தபோது வண்ணார் சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. இதனால் ‘அனேகன்’ படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரியும், சில காட்சிகளை நீக்கக் கோரியும் தணிக்கை குழு அதிகாரிகளிடம் கடந்த 4ந்தேதி அன்று புகார் மனு கொடுத்தேன்.

அந்த மனு மீது அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வருகிற 13ந்தேதி அன்று திரையிட இருக்கும் அனேகன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், மனுதாரர் தணிக்கை குழுவை அணுகி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என உத்தர விட்டார்.


Post your comment





Related News
தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்! ட்ரண்டிங்
டங்காமாரி ரோஹித்தை ஓரங்கட்டும் இயக்குனர்கள்!
ஆவேசப்பட்ட ரசிகர்களை அமைதிப்படுத்திய தனுஷ்
பட்ஜெட்..25 கோடி! சம்பளம் 15 கோடி..!
அனேகன் 3 நாளில் ரூ.30 கோடி வசூல்: மகிழ்ச்சியில் தனுஷ்
தனுஷ் நடித்த அனேகனுக்கு கேளிக்கை வரிவிலக்கு
லிப் லாக் முத்தக்காட்சி நீக்கினால் யூ சான்றிதழ்: அனேகன் படத்திற்கு தணிக்கை குழு நிபந்தனை
அனேகன் டிரைலர் ஜனவரி 7-ம்தேதி ரிலீஸ்
உங்களுக்கு 30, எனக்கு 21 தானே ஆகுது, அதுக்கு டைம் இருக்கு: தனுஷிடம் தெரிவித்த நடிகை அமிரா
நாளை தனுஷ் அனேகன் இசை வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions