ஆவேசப்பட்ட ரசிகர்களை அமைதிப்படுத்திய தனுஷ்

Bookmark and Share

ஆவேசப்பட்ட ரசிகர்களை அமைதிப்படுத்திய தனுஷ்

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘அனேகன்’. இதில் தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் நடித்திருந்தார். கே.வி.ஆனந்த் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பிப்ரவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.

இந்நிலையில் அனேகன் படத்தை தமிழ் புத்தாண்டு தினத்தன்று பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஒளிப்பரப்ப உள்ளதாக அறிவித்திருந்தது. இதையறிந்த தனுஷ் ரசிகர்கள், அனேகன் படம் வெளியாகி 100 நாட்கள் கூட ஆகவில்லை. தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிரும் நிலையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கூடாது என்று தனுஷின் சமூக வலைதளத்திலும், டுவிட்டரில் டிரண்டாக்கியும் எதிர்த்தனர்.

இதையறிந்த தனுஷ், ரசிகர்களிடம் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

“தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர்களுக்கு இடையேயான ஒப்பந்தம் எனக்கு தெரியாது. எனவே இதுபற்றி நான் கருத்து தெரிவிக்க முடியாது. அனேகன் படம் மிகப்பெரிய ஹிட்டான படம். அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்தது.

அப்படி தொலைக்காட்சியில் படத்தை ஒளிப்பரப்பினால் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரும் படத்தை ரசிப்பார்கள்” என்று என்று தனுஷ் கூறியுள்ளார். 


Post your comment





Related News
தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்! ட்ரண்டிங்
டங்காமாரி ரோஹித்தை ஓரங்கட்டும் இயக்குனர்கள்!
பட்ஜெட்..25 கோடி! சம்பளம் 15 கோடி..!
அனேகன் 3 நாளில் ரூ.30 கோடி வசூல்: மகிழ்ச்சியில் தனுஷ்
தனுஷ் பட வழக்கு: தணிக்கை குழுவை அணுகி தீர்வு காணலாம்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தனுஷ் நடித்த அனேகனுக்கு கேளிக்கை வரிவிலக்கு
லிப் லாக் முத்தக்காட்சி நீக்கினால் யூ சான்றிதழ்: அனேகன் படத்திற்கு தணிக்கை குழு நிபந்தனை
அனேகன் டிரைலர் ஜனவரி 7-ம்தேதி ரிலீஸ்
உங்களுக்கு 30, எனக்கு 21 தானே ஆகுது, அதுக்கு டைம் இருக்கு: தனுஷிடம் தெரிவித்த நடிகை அமிரா
நாளை தனுஷ் அனேகன் இசை வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions