டங்காமாரி ரோஹித்தை ஓரங்கட்டும் இயக்குனர்கள்!

Bookmark and Share

டங்காமாரி ரோஹித்தை ஓரங்கட்டும் இயக்குனர்கள்!

தனுஷ் நடித்த அனேகன் படத்தில் டங்காமாரி ஊதாரி புட்டுகின நீநாரி -என்ற சென்னை கானா பாடலை எழுதியவர் ரோஹித். ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்த அந்த பாடல் சூப்பர் ஹிட்டானதால், அதையடுத்து ரோஹித்தை பாடல் எழுத பல இயக்குனர்கள் விரும்பி அழைத்தனர்.

அப்படி அவர் பாடல் எழுதிய படங்களில் ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட் பாடலும் ஒன்று. அதில் டண்டனக்கா என்று தொடங்கும் அந்த பாடலை அனிருத் பாடினார். டி.இமான் இசையமைத்த அப்பாடலைத்தான் சேனல்களில் ஒளிபரப்பு செய்து படத்துக்கான புரோமோஷனைத் தொடங்கினர்.

ஆனால், டண்டனக்கா என்ற வார்த்தை தன்னை கிண்டல் செய்வது போல் இருப்பதாக டி.ராஜேந்தர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதையடுத்து, இந்த படத்தில் ஜெயம்ரவி உங்களது ரசிகராக நடிக்கிறார்.

அதனால்தான் அந்த பாடலை வைத்தோம் என்று அவரை சமாதானம் செய்தனர். ஆனால் அவர் அதற்கு உடன்படவில்லை. பின்னர், நீதிமன்றம் சென்றார் டி.ஆர்., ஆனால், இருதரப்பினரும் பேசி சமாதானத்திற்கு வாருங்கள் என்று நீதிபதி சொல்லி அனுப்பி விட்டார்.

அதையடுத்து டி.ஆரிடம் சமாதானம் பேசி வருகின்றனர். என்றாலும் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லையாம். இதன்காரணமாக, ஒரே பாடலில் ஓஹோவென்று பிரபலமான டங்காமாரி ரோஹித் இரண்டாவது பாடலிலேயே பிரச்சினையில் சிக்கி விட்டதால்.

இப்போது அவருக்கு பாடல் கொடுக்கவே இயக்குனர்கள் தயங்கி வருகின்றனர். சில படங்களில் அவர் எழுத இருந்த பாடல்களைகூட வேறு பாடலாசியரியர்களிடம் கொடுத்து வருகிறார்கள் இயக்குனர்கள்.


Post your comment





Related News
தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்! ட்ரண்டிங்
ஆவேசப்பட்ட ரசிகர்களை அமைதிப்படுத்திய தனுஷ்
பட்ஜெட்..25 கோடி! சம்பளம் 15 கோடி..!
அனேகன் 3 நாளில் ரூ.30 கோடி வசூல்: மகிழ்ச்சியில் தனுஷ்
தனுஷ் பட வழக்கு: தணிக்கை குழுவை அணுகி தீர்வு காணலாம்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தனுஷ் நடித்த அனேகனுக்கு கேளிக்கை வரிவிலக்கு
லிப் லாக் முத்தக்காட்சி நீக்கினால் யூ சான்றிதழ்: அனேகன் படத்திற்கு தணிக்கை குழு நிபந்தனை
அனேகன் டிரைலர் ஜனவரி 7-ம்தேதி ரிலீஸ்
உங்களுக்கு 30, எனக்கு 21 தானே ஆகுது, அதுக்கு டைம் இருக்கு: தனுஷிடம் தெரிவித்த நடிகை அமிரா
நாளை தனுஷ் அனேகன் இசை வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions