அனேகன் 3 நாளில் ரூ.30 கோடி வசூல்: மகிழ்ச்சியில் தனுஷ்

Bookmark and Share

அனேகன் 3 நாளில் ரூ.30 கோடி வசூல்: மகிழ்ச்சியில் தனுஷ்

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘அனேகன்’. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். அமைரா தஸ்தூர், கார்த்திக், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் கடந்த 3 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,

‘அனேகன்’ 3 நாட்களில் ரூ.30கோடியை வசூலித்துள்ளது. இந்த வசூல் தெலுங்கு பதிப்பை தவிர்த்து கணக்கிடப்பட்டுள்ளது. நன்றி... நன்றி... நன்றி... வருகிற 20-ந் தேதி ‘அனேகன்’ தெலுங்கு பதிப்பான ‘அனேகடு’ வெளியாகவிருக்கிறது. மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் கடந்த 6-ந் தேதி வெளியான ‘ஷமிதாப்’ படமும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. தற்போது ‘அனேகன்’ படமும் வசூலில் முன்னணியில் வருவதால் தனுஷ் இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார். தற்போது, இவரது அடுத்த வெளியீடாக ‘காக்கிச்சட்டை’ படம் பிப்.27-ந் தேதி வெளியாகவிருக்கிறது. தற்போது ‘மாரி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 


Post your comment





Related News
தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்! ட்ரண்டிங்
டங்காமாரி ரோஹித்தை ஓரங்கட்டும் இயக்குனர்கள்!
ஆவேசப்பட்ட ரசிகர்களை அமைதிப்படுத்திய தனுஷ்
பட்ஜெட்..25 கோடி! சம்பளம் 15 கோடி..!
தனுஷ் பட வழக்கு: தணிக்கை குழுவை அணுகி தீர்வு காணலாம்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தனுஷ் நடித்த அனேகனுக்கு கேளிக்கை வரிவிலக்கு
லிப் லாக் முத்தக்காட்சி நீக்கினால் யூ சான்றிதழ்: அனேகன் படத்திற்கு தணிக்கை குழு நிபந்தனை
அனேகன் டிரைலர் ஜனவரி 7-ம்தேதி ரிலீஸ்
உங்களுக்கு 30, எனக்கு 21 தானே ஆகுது, அதுக்கு டைம் இருக்கு: தனுஷிடம் தெரிவித்த நடிகை அமிரா
நாளை தனுஷ் அனேகன் இசை வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions