பட்ஜெட்..25 கோடி! சம்பளம் 15 கோடி..!

Bookmark and Share

பட்ஜெட்..25 கோடி! சம்பளம் 15 கோடி..!

தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'அனேகன்' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியான முதல் 3 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருக்கிறார்.

தமிழில் அனேகன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான அனேகுடு படத்தை வரும் 20ஆம் தேதியே வெளியிட உள்ளனர். வாயை மூடி பேசவும் பட இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தற்போது 'மாரி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

இப்படத்தில் வடசென்னை தாதா வேடம்.  மாரி படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை அடுத்து 'வேலையில்லா பட்டதாரி' பார்ட் 2 படத்தில் மீண்டும் வேல்ராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவிருக்கிறது. 'விஐபி'யைப் போலவே தனுஷுக்கு பெரிய மாஸ் இமேஜை உருவாக்கித்தரும்வகையில் இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறாராம் வேல்ராஜ்.

மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் தானே படத்தைத் தயாரித்துக் கொடுக்கிறார் தனுஷ். இந்தப்படத்துக்காக அன்புவிடமிருந்து தனுஷ் வாங்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 25 கோடி. இதில் அவரது சம்பளம் மட்டும் 15 கோடியாம். 


Post your comment





Related News
தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்! ட்ரண்டிங்
டங்காமாரி ரோஹித்தை ஓரங்கட்டும் இயக்குனர்கள்!
ஆவேசப்பட்ட ரசிகர்களை அமைதிப்படுத்திய தனுஷ்
அனேகன் 3 நாளில் ரூ.30 கோடி வசூல்: மகிழ்ச்சியில் தனுஷ்
தனுஷ் பட வழக்கு: தணிக்கை குழுவை அணுகி தீர்வு காணலாம்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தனுஷ் நடித்த அனேகனுக்கு கேளிக்கை வரிவிலக்கு
லிப் லாக் முத்தக்காட்சி நீக்கினால் யூ சான்றிதழ்: அனேகன் படத்திற்கு தணிக்கை குழு நிபந்தனை
அனேகன் டிரைலர் ஜனவரி 7-ம்தேதி ரிலீஸ்
உங்களுக்கு 30, எனக்கு 21 தானே ஆகுது, அதுக்கு டைம் இருக்கு: தனுஷிடம் தெரிவித்த நடிகை அமிரா
நாளை தனுஷ் அனேகன் இசை வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions