தனுஷ் படத்தில் அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார்!

Bookmark and Share

தனுஷ் படத்தில் அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார்!

எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களைத் தொடர்ந்து துரைசெந்தில்குமார் இயக்கும் படம் கொடி. இந்தப்படத்தில் தனுஷ் இரட்டைவேடங்களில் நடிக்கிறார்.

அண்ணன் தம்பியாக அவர் நடிக்கவிருப்பதாகவும் அண்ணன் அரசியல்வாதி என்றும் சொல்லப்படுகிறது. படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷாவும் ஷாம்லியும் நடிக்கவிருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரிலேயே தொடங்குவதாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப்போய் இன்று தொடங்கியிருக்கிறது. படத்தின் கதைக்களமே பொள்ளாச்சி என்பதால் படப்பிடிப்பையும் அங்கேயே தொடங்கியிருக்கிறார்கள்.

சிலநாட்கள் தனுஷ் மட்டுமே நடிக்கிறார் என்றும் அதன்பின் மற்ற நடிகர் நடிகைகள் கலந்துகொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப்டபத்துக்கு முதலில் அனிருத் இசையமைப்பதாக இருந்தது. 

தனுஷூடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அனிருத் படத்திலிருந்து விலகிக்கொண்டார் என்று சொல்லப்பட்டது. இப்போது படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். 

 


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!
பைரவா இசை விழா நடைபெறும் இடம் குறித்த முக்கிய தகவல்!
ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது!
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் பாடல் என்ன தெரியுமா?
சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு ஒரு நெருப்புடா பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions