அனிருத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள் - தனுஷ்

Bookmark and Share

அனிருத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள் - தனுஷ்

திரையுலகில் தற்போது பிரிக்க முடியாத இருவர் என்றால் தனுஷ், இசையமைப்பாளர்  அனிருத் ஆகிய இருவரைச்  சொல்லலாம்.  அனிருத் இல்லாமல் தன்னுடைய படத் தயாரிப்பை தனுஷ் செய்வதில்லை என்ற அளவிற்கு இருவரும் அவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் அனிருத் இடத்தில் யுவன்ஷங்கர் ராஜா இருந்தார். தனுஷ் அண்ணன் செல்வராகவனுக்கும், யுவன்ஷங்கர்  ராஜாவுக்கும் பிரச்சனை வந்து பிரிந்த போது, தனுஷும் தன்னுடைய படங்களுக்கு யுவனை இசையமைக்க அழைப்பதில்லை.

தனது மனைவியின் உறவினரான அனிருத்துடன் இணைந்து தொடர்ச்சியாக ஹிட்டுக்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டார். சரியான படங்கள் அமையாததால் யுவனும் பின் தங்கிவிட்டார்.

ஆனாலும், தனுஷின் மனைவி இயக்கியுள்ள 'வை ராஜா வை' படத்திற்கு யுவன்தான் இசையமைத்துள்ளார். அனிருத் ஏற்கெனவே ஒரு சில படங்களில் பாடல் காட்சிகளுக்கு தலையை காட்டியவர். சமீபத்தில் தனுஷ் நடித்து வரும் 'மாரி' படத்திற்காக தனுஷ் கேட்டுக் கொண்டதற்காக ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார்.

படு லோக்கலான பாடலாக அமைந்துள்ள அந்தப் பாடலில் தனுஷ் , அனிருத் இருவருமே அட்டகாசமாக நடனமாடியுள்ளார்களாம். அது பற்றி தனுஷே, அனிருத்தைப் பாராட்டியுள்ளார்.

“அனிருத் அந்த பாடலுக்கு ஆடியுள்ள நடனத்தைப் பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்” என்று பாராட்டியிருக்கிறார். இப்படி தங்களை மாறி மாறி பாராட்டிக் கொண்டே 'மாரி' வரை வந்துவிட்டார்கள்.


Post your comment





Related News
தனுஷ் படங்களுக்கு ஏன் இசையமைப்பது இல்லை- பதிலளித்த அனிருத்
இந்த தனுஷ் பாடலை என் காதலியை இன்னொருத்தடன் பார்த்த வலியில் கம்போஸ் செய்தது- அனிருத்
அனிருத்தை ஒதுக்கும் தனுஷ் குடும்பம்..? சிவகார்த்திகேயன் ஆதரவு
அனிருத்தை நிரந்தரமாக பிரிந்த தனுஷ்!
அனிருத்துடன் மீண்டும் இணைவது எப்போது? தனுஷ் பேட்டி!
அனிருத்தின் நட்பை அதிகாரப்பூர்வமாக முறித்துக்கொண்ட தனுஷ்!
மீண்டும் இணைந்த தனுஷ் - அனிருத்?
தனுஷூக்கும் அனிருத்துக்கும் சண்டையா?
தனுஷ் படத்தில் அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார்!
தனுஷ் - அனிருத் கூட்டணி பிரிந்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions