தனுஷிடம் ஹாலிவுட் லுக் இருப்பதாக சொன்ன பாலுமகேந்திரா!

Bookmark and Share

தனுஷிடம் ஹாலிவுட் லுக் இருப்பதாக சொன்ன பாலுமகேந்திரா!

சினிமாவுக்கு வந்து 13 வருடங்களில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டவர் தனுஷ். அதில் மறைந்த கேமரா கவிஞன் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் அது ஒரு கனா காலம் என்ற படத்திலும் ப்ரியாமணியுடன் இணைந்து நடித்தார். ஆனால், அந்த படத்தில் தனுஷை நடிக்க வைத்த பிறகு அவரைப்பற்றி நிறைய விசயங்களை சினிமா வட்டாரங்களில் கூறி வந்தார் பாலுமகேந்திரா.

குறிப்பாக, தனுஷ் ஒரு நல்ல நடிகன். எதிர்காலத்தில் பெரிய ஹீரோவாக வருவதற்கான எல்லா தகுதிகளும் அவரிடம் உள்ளது என்று தனது கருத்தை கூறினார். மேலும், அவரிடம் இந்தியன் லுக்கே இல்லை ஹாலிவுட் லுக்தான் உள்ளது. அதனால் அவர் ஹாலிவுட்டில் நடிப்பதற்கான தகுதிகளும் உள்ளது என்று கூறினார்.

அதைக்கேட்டபிறகுதான் தனது பொல்லாதவன் படத்தில் தனுஷை நடிக்க வைக்கும் யோசனையே வெற்றிமாறனுக்கு ஏற்பட்டதாம்.ஆக, அதையடுத்து தான் இயக்கிய ஆடுகளம் படத்திலும் தனுஷை நடிக்க வைத்தார் வெற்றிமாறன். அந்த படத்தில் நடித்தமைக்காக தனுசுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. எப்படியோ தனுசுக்கு தேசிய விருது கிடைப்பதற்கான பின்னணியில் மறைந்த டைரக்டர் பாலுமகேந்திராவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்.


Post your comment





Related News
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்
இங்கு உட்கார எனக்கு வெட்கமாக உள்ளது- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு சென்சாருக்குப் போகாதீர்கள்: எஸ்.வி.சேகர்
பாலு மகேந்திராவின் மாணவர் ஸ்ரீகாந்தன் இயக்கும் ‘தப்பு தண்டா’
ஒரே படத்தில் தந்தை, மகளுடன் நடிக்கும் ஆர்யா!
கனடாவில் தெறி திரைப்படம் ரத்து!
கமல் இல்லையென்றால் நான் இல்லை: இயக்குனர் மகேந்திரன் நெகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions