துல்கர் பட உரிமையை வாங்கிய தனுஷ்!

Bookmark and Share

துல்கர் பட உரிமையை வாங்கிய தனுஷ்!

மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘சார்லி’ படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு கேரளாவில் வெளியாகி இருக்கும் படம் ‘சார்லி’. துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கி இருக்கிறார். ஃபைண்டிங் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது.

மலையாளத்தில் இப்படத்துக்கு இளைஞர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. வசூலிலும் இப்படம் முன்னணியில் இருந்துவருகிறது.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற தற்போதே தமிழ் திரையுலக தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வன்டர்பார் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!
துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் ரஜினி மகள்!
துல்கர் சல்மான் போஸ்டரை பார்த்து சிரித்த மம்முட்டி!
“புதியவர்களின் வரவால் எனக்கு பாதிப்பில்லை” - பிருத்விராஜ்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions