தனுஷின் புதிய படம் தள்ளிப்போனது ஏன்?

Bookmark and Share

தனுஷின் புதிய படம் தள்ளிப்போனது ஏன்?

துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல்வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது.

அது தள்ளிப்போயிருக்கிறதாம். தனுஷ் முதன்முறையாக இரட்டைவேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா முதன்முறையாக நடிக்கிறார்.

இன்னொரு வேடத்துக்கு ஜோடியாக ஷாம்லி நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு தள்ளிப்போனது ஏன்? என்றால், நவம்பர் பத்தாம்தேதி தீபாவளி என்பதால், தொழிலாளர்கள் உட்பட எல்லோரும் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடிவிட்டு அதன்பின் தொடங்கலாம் என்பது ஒரு காரணம்.

இன்னொரு காரணமும் இருக்கிறதாம். இப்போது இண்டியன்சூப்பர்லீக் கால்பந்து போட்டிகளின் தூதுவராக அவர் இருக்கிறார். அதனால் போட்டிகள் நடக்கிற நேரத்தில் அவர் மைதானத்துக்குச் செல்லவேண்டியும் இருப்பதால் முக்கியமான போட்டிகள் முடிவடைந்த பின்பு படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்றும் முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா?- ஷாக் ஆன ரசிகர்கள்
பாதியில் நிறுத்தப்படுகிறதா பிரபல டிவியின் மாப்பிள்ளை சீரியல்? - காரணம் என்ன?
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா? நடிகர் செந்தில் பளீர் பதில்
கனடாவை கலக்கும் தமிழ் இசை பாடகர்
இலை எங்க போடுவாங்களோ அங்க நான் இருப்பேன்.. அந்த மாதிரி இருக்கு செந்தில் பேசுவது!
செந்தில்-ஸ்ரீஜா இடையே விரிசல்? அதிர்ச்சி செய்தி
சூர்யா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் காமெடி ஜாம்பவான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions