இது தனுஷின் நிஜ குடும்பம்....

Bookmark and Share

இது தனுஷின்  நிஜ குடும்பம்....

இதற்கு முன்னர் தனுஷ் நடித்து வரும் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் தனுஷ் குடும்பத்தினரின் புகைப்படத்தைப் பற்றிய செய்தி ஒன்றைப் பார்த்தோம்.

அது சம்பந்தமாக ஒரு தேடலில் இணையத்தில் துழாவிய போது கிடைத்த ஒரு போட்டோ இது. இந்தப் படத்தில் தனுஷின் அண்ணன் செல்வராகவன், அண்ணி கீதாஞ்சலி, அக்காக்கள் விமலகீதா, கார்த்திகா தேவி, அவர்களுடைய கணவர்கள், தனுஷின் அம்மா விஜயலட்சுமி, அப்பா கஸ்தூரிராஜா என குடும்பத்தினர் அனைவரும் இருக்கும் புகைப்படத்தைப் பார்க்க முடிந்தது.

தனுஷின் அண்ணன், அண்ணி, மனைவி, அப்பா, அம்மா அனைவரும் திரைத் துறையில் இருக்க தனுஷின் அக்காக்கள் இருவருமே டாக்டர்களாக இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் அண்ணன் செல்வராகவன் பி.ஈ. படித்து முடித்திருக்க, தனுஷ் மட்டும் பள்ளியைத் தாண்டவேயில்லை. அதற்குள்ளாகவே அவருடைய அப்பா 'துள்ளுவதோ இளமை' படத்தில் மகனை நாயகனாக அறிமுகப்படுத்திவிட்டார்.

இருந்தாலும் தனுஷ், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு இங்கிலீஷில் பிச்சி உதற ஆரம்பித்து விட்டார். தனுஷின் சமீபத்திய பேட்டிகளில் கூட அவருடைய ஆங்கில அறிவையும், பேச்சுத் திறனையும் இந்த உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions