தனுஷின் அடுத்த படம் இன்று தொடங்கியது!

Bookmark and Share

தனுஷின் அடுத்த படம் இன்று தொடங்கியது!

கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் அச்சம்என்பதுமடமையடா படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்ட கௌதம்மேனன், உடனடியாக தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார்.

எனைநோக்கிப்பாயும்தோட்டா என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப்படத்திள் படப்பிடிப்பு இன்று தொடங்கியது, சென்னை கிழக்குக்கடற்கரைச்சாலையிலுள்ள ஒரு கல்லூரியில் இன்று காலை படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

இன்று தொடங்கி இன்னும் பத்துநாட்கள் முதல்கட்டப் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். முதல்கட்டப்படப்பிடிப்பில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாகப் படமாக்கவிருக்கிறார்களாம்.

இந்தப்படத்தில் நாயகியாக மேகாஆகாஷ் என்பவர் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ஜெயராம் மகன் காளிதாஸ் கதாநாயகனாக நடிக்கும் ஒருபக்கக்கதை படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

கௌதமும் தனுஷூம் இணையும் படத்தில் அவர் நாயகியாகியிருப்பது பல நாயகிகளைப் பொறாமை கொள்ளச் செய்திருக்கிறதாம்.   


Post your comment





Related News
தனுஷ், கௌதம் மேனன் படத்தில் ராணாவுக்கு என்ன வேடம் தெரியுமா- அவரே சொல்கிறார்
இத்தனை கோடிக்கு விலைப்போனதா எனை நோக்கி பாயும் தோட்டா, தனுஷ் சாதனை
எனை நோக்கி பாயும் தோட்டா பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷ் விவகாரம் குறித்து முதல்முறையாக பேசிய கௌதமி!
கௌதமுக்காக இறங்கி அடிக்கும் தனுஷ்!
கோடை விடுமுறையில் தனுஷ் – கௌதம் மேனன் படம்!
தனுஷ் இயக்கும் படத்தில் கெளதம் மேனன்?
தனுஷுடன் மோதும் கௌதம் மேனன்!
சிம்புவையும், தனுஷையும் விட்டுவிட்டு புதிய படம் இயக்கும் கவுதம் மேனன்?
'என்னை நோக்கி பாயும் தோட்டா' குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions