தனுஷ் - ஜி.வி.பிரகாஷ்குமார் மோதல்?

Bookmark and Share

தனுஷ் - ஜி.வி.பிரகாஷ்குமார் மோதல்?

தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் படங்களை மட்டுமல்லாது மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் தன்னுடைய நிறுவனத்தின் சார்பாக தயாரித்து வருகிறார்.

ஏற்கெனவே சிவகார்த்திகேயனை வைத்து படங்களைத் தயாரித்தவர் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் 'நானும் ரௌடிதான்' படத்தைத் தயாரித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் 'ஆடுகளம்' வெற்றிக் கூட்டணியான இயக்குனர் வெற்றி மாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைவதற்கான வேலைகள் ஆரம்பமாகின.

அந்தப் படத்திற்கு 'சூதாடி' என்றும் பெயர் வைத்திருந்தனர். ஆனால், தற்போது அந்தக் கூட்டணியில் இருந்து ஜிவி.பிரகாஷ் விலகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். சமீபத்தில் வெற்றிமாறன், தனுஷ் இணைந்து தயாரித்து தேசிய விருது பெற்ற 'காக்கா முட்டை' படத்திற்குக் கூட ஜி.வி.பிரகாஷ்குமார்தான் இசையமைத்திருந்தார்.

ஜி.வி.பிரகாஷ் தான் 'சூதாடி' படத்திலிருந்து விலகிக் கொண்டார் என்று சொல்கிறார்கள். தனுஷ் தயாரிக்கும் படத்தில் தன்னை இணைத்துக் கொள்வதில் ஜிவி.பிரகாஷ் விரும்பவில்லையாம்.

அப்படி மாற்றம் என்றால் தனுஷ், அனிருத்தைத்தானே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்வார், அப்படியிருக்க சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்தது ஏன் என்றும் கேள்விகள் எழும்பியுள்ளன. சில நாட்களில் இதற்கான விடை கிடைக்கலாம்.

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions