இயக்குநர் என்னை அணுகிய விதம் ரொம்ப பிடித்திருந்தது-தனுஷ்!

Bookmark and Share

இயக்குநர் என்னை அணுகிய விதம் ரொம்ப பிடித்திருந்தது-தனுஷ்!

தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் அதை பற்றி கூறும்போது;- “ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறேன். நன்றாக விற்பனையான ஒரு நாவலை படமாக பண்ணுகிறோம். அந்த இயக்குநர் என்னை அணுகிய விதம் ரொம்ப பிடித்திருந்தது.

இங்கு இருக்கும் நடிகர்கள் தேர்வு குழு “எங்கள் மனதில் ஒருவர் இருக்கிறார். நாங்கள் 10 நடிகர்களின் படத்தை அனுப்புகிறோம். ஆனால், நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள் என எங்களுக்கு தெரியும்” என அனுப்பி இருக்கிறார்கள். இவர்களும் என்னை மனதில் வைத்து அனுப்ப, இயக்குநரும் 10 படங்களையும் பார்த்துவிட்டு என்னை தேர்வு செய்திருக்கிறார்.

ஹாலிவுட் படத்தின் இயக்குநரும் நான் நடித்த முதல் படத்தில் இருந்து கடைசி படம் வரை அனைத்து படத்தையும் பார்த்திருக்கிறார். அதற்குப் பிறகு என்னைத் தொடர்பு கொண்டார். லண்டனில் சந்தித்து பேசினோம். “இந்த படம் பண்ற என்பதை தவிர வேறு எதைப் பற்றியும் பேச நான் அனுமதிக்க மாட்டேன்” என்று தான் முதலில் சொன்னார்.

இந்த கதாபாத்திரத்துக்கு உன்னை தவிர வேறு எந்தொரு நடிகரையும் நினைக்க முடியவில்லை. நீ தான் செய்ய வேண்டும் என்றார்கள். நேரமின்மையால் லண்டனுக்கு செல்லும் போது விமானத்தில் தான் கதையை படித்துக் கொண்டே சென்றேன். எனக்கென்றே செய்த கதையைப் போலவே தெரிந்தது.” என கூறிஉள்ளார்.


Post your comment





Related News
விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
ஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம்
கடற்கரையில் நீருக்கடியில் நடந்த புதிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய Wonder Women நடிகை
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
பிரபல நடிகையை வீடு புகுந்து பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் - அதிர்ச்சி தகவல்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
பிரபல காமெடி நடிகை மும்பை மருத்துவமனையில் அனுமதி
ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் தூக்கத்திலேயே மரணம்- சோகத்தில் ஹாலிவுட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions