காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் தனுஷ்

Bookmark and Share

காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் தனுஷ்

வெற்றி மாறனின் உதவியாளர் மணிகண்டன். இவர் ஒளிப்பதிவாளரும்கூட. பல குறும் படங்களை இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தநிலையில்தான், காக்கா முட்டை கதையை தனுஷ்-வெற்றிமாறனிடம் சொல்லியிருக்கிறார். கதை பிடித்து விடவே விருதுக்காகவே அந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

ஆனால், எதிர்பார்த்தபடியே தேசிய விருது பெற்ற அப்படம் இப்போது ரசிகர்களின் பேராதரவுடன் அதிகப்படியான தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில், விருது படங்கள் போரடிக்கும் என்று தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக இருந்து வந்த ஒரு மூட நம்பிக்கையை இந்த படம் உடைத்திறந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், தற்போது விதார்த் தயாரித்து நடிக்கும் குற்றமும் தண்டனையும் என்ற படத்தை இயக்கியிருக்கும் மணிகண்டன், அடுத்தபடியாக தனுஷை வைத்து ஒரு படம் இயக்குகிறார்.

அதற்கான கதை விவாதம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மாரி, வேலையில்லா பட்டதாரி-2 படங்களில் பிசியாகயிருக்கும் தனுஷ், வெற்றி மாறனின் வடசென்னையை முடித்ததும் மணிகண்டன் இயக்கும் படத்தை தயாரித்து நடிக்கிறாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions