அடுத்த ஹீரோவை அறிமுகப்படுத்துகிறாரா தனுஷ்

Bookmark and Share

அடுத்த ஹீரோவை அறிமுகப்படுத்துகிறாரா தனுஷ்

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமைகளுடன் உயர்ந்திருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது `எனை நோக்கி பாயும் தோட்டா', `வடசென்னை', `மாரி-2' படங்களில் நடித்து வருகிறார். ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

அதேநேரத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் சில படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் தனுஷ் அடுத்ததாக மலையாள படம் ஒன்றை ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தில் பிரபல தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் கலக்கிய தீனாவை நாயகனாக தனுஷ் அறிமுகம் செய்யவிருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. 

தீனா ஏற்கனவே, தனுஷ் இயக்கத்தில் `பவர்பாண்டி' படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், அவரை ஹீரோவாக தனுஷ் அறிமுகம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
நெடும் படமாகும் குறும்படம்
மலையாளத்துக்கு செல்லும் பண்ணையாரும் பத்மினியும் இசையமைப்பாளர்!
பெங்களூர் திரைப்பட விழாவில் தமிழ் படங்கள்
மயில் இறகாய் வருடும் காவியத் தலைவனின் \'யாருமில்லா\' பாடல்: ஃபேஸ்புக்கில் டிரெண்ட் ஆகிறது
இன்று ரிலீஸாகும் புதிய படங்கள்!
நிஜமானது 'ஸ்லம்டோக் மில்லியனர்' திரைப்படம் : கோடீவரரானார் இந்திய ஏழை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions