தனுஷ் தயாரிக்கும் கமலின் குடும்பப்படம்

Bookmark and Share

தனுஷ் தயாரிக்கும் கமலின் குடும்பப்படம்

மார்க்கெட்டில் உள்ள இளம் ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறார் கமல். அதன்படி கமல் விரைவில் தனுஷ் உடன் ஒரு படத்தில் இணைய திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவல் அடிபடுகிறது.

தனுஷ் நடிக்கும் படத்துக்கு சமீபகாலமாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. அதே அளவு எதிர்பார்ப்பு அவர் தயாரிக்கும் படங்களுக்கும் உண்டு. தனஷ் தயாரிப்பில் வெளிவந்த ’எதிர்நீச்சல்’, ’வேலையில்லா பட்டதாரி’ ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாகும் ’காக்கி சட்டை’ படமும் தனுஷ் தயாரித்த படமே. அதோடு சிம்பு நடிக்க, தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரிக்கவிருக்கிறார் தனுஷ்.  

சமீபத்தில் தான் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தனுஷ் அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படம் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் இயக்குனரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை கமலிடமே தனுஷ் விட்டுவிட்டாராம். மேலும் இந்த படத்தில் தனுஷூம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

அவருக்கு ஜோடியாக கமலின் மகள்களான ஸ்ருதி அல்லது அக்ஷரா நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக... தனுஷ் தயாரிக்கும் கமலின் குடும்பப்படம்?


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions