தனுஷின் தொடரி படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி வெளியானது

Bookmark and Share

தனுஷின் தொடரி படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி வெளியானது

தனுஷ்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கியிருக்கும் புதிய படம் ‘தொடரி’. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பித்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இது படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தணிக்கை சான்றிதழ் கிடைத்த சந்தோஷத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, வருகிற செப்டம்பர் 22-ந் தேதி உலகமெங்கும் வெளிவரவிருக்கிறது.

இப்படம் முழுக்க முழுக்க ரெயிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ் கேண்டீன் ஊழியராக நடித்து இருக்கிறார். இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions