அரசியல்வாதியாக நடித்தது புதிய அனுபவமாக இருந்தது: தனுஷ் பேட்டி

Bookmark and Share

அரசியல்வாதியாக நடித்தது புதிய அனுபவமாக இருந்தது: தனுஷ் பேட்டி

தனுஷ் முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடித்து இருக்கும் படம், ‘கொடி.’ இந்த படத்தில் திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். டைரக்டர் வெற்றிமாறன் தயாரிப்பில், ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

அதில் கலந்துகொண்ட தனுஷ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு தனுஷ் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘கொடி’ படத்தில் அப்பா-மகனாக நடித்து இருக்கிறீர்களா, அண்ணன்-தம்பியாக நடித்து இருக்கிறீர்களா?

பதில்:- இரட்டை சகோதரர்களாக நடித்து இருக்கிறேன். அதில் தாடி வைத்திருப்பவர், மூத்தவர். அவர்தான் அரசியல்வாதி. அவருக்கு ஜோடி, திரிஷா.

கேள்வி:- அரசியல்வாதியாக நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

பதில்:- அரசியல் கதையம்சம் உள்ள படத்தில், அரசியல்வாதியாக நடித்தது, புதிய அனுபவமாக இருந்தது. இது, அரசியல் தொடர்பான கதை என்றாலும், படத்தில் யாரையும் தாக்கவில்லை. அரசியலில் உள்ள நல்லதையும் சொல்லியிருக்கிறோம். கெட்டதையும் சொல்லியிருக்கிறோம்.

கேள்வி:- அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்வார்கள். அதை தூர் வாருவது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறதா?

பதில்:- அப்படி பார்க்காதீர்கள். இது குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும். நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டுமா, வரக்கூடாதா? என்ற கேள்விக்கு பதில், இந்த படத்தில் இருக்கிறது. எனக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணனும், அப்பாவாக கருணாசும் நடித்து இருக்கிறார்கள்.

கேள்வி:- ‘ஆடுகளம்’ படத்திலேயே உங்களுடன் ஜோடி சேர இருந்தவர், திரிஷா. அப்போது நடிக்க முடியவில்லை என்பதற்காக, இந்த படத்தில் ஜோடியாக திரிஷா சேர்க்கப்பட்டாரா?

பதில்:- அப்படியில்லை. கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பதாக டைரக்டர் கருதியதால், சேர்க்கப்பட்டார்.

கேள்வி:- இரட்டை வேடங்களில் நடிக்க சிரமமாக இருந்ததா?

பதில்:- சிரமம்தான். ஒவ்வொரு காட்சியிலும் இரண்டு முறை நடிக்க வேண்டியிருந்தது. நான் இதற்கு முன்பு இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்பதால், புது அனுபவமாக இருந்தது. இரட்டை வேடங்களில் நடித்தவர்கள் மீது பெரிய மரியாதை ஏற்பட்டது.”

இவ்வாறு தனுஷ் கூறினார்.

பாடல் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன், டைரக்டர் துரை செந்தில்குமார், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன், பட அதிபர்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் ஆகியோர் கலந்துகொண்டார்கள். 


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
கஷ்டங்களிலும் என்னுடன் இருந்தவர் இவர்தான் – தனுஷ் உருக்கம்!
தனுஷின் கேரியரில் உச்சம் தொட்ட கொடி!
தீபாவளி ரேஸில் இணைந்த தனுஷின் கொடி!
தனுஷின் ‘கொடி’ தீபாவளியில் ரிலீஸ்!
தமிழ்நாட்டின் அணுமின் நிலையம் பிரச்சனையை கொடியில் பேசும் தனுஷ்!
கொடி படத்தில் வயதான அப்பாவாக நடிக்கும் தனுஷ்!
தனுஷின் கொடி ரிலீஸ் பிளான்!
கொடி படம் ரிலிஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல்!
கொடி படப்பிடிப்பை முடித்த தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions