தனுஷின் கொடி படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது

Bookmark and Share

தனுஷின் கொடி படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது

தங்கமகன் படத்திற்குப் பிறகு தனுஷ் தற்போது ‘கொடி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 'எதிர்நீச்சல்' மற்றும் 'காக்கி சட்டை' ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இதில் துனுஷ் முதன் முதலாக அண்ணன் - தம்பி என்று இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

தனுஷ் அரசியல்வாதியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கியது. தற்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. அனேகமாக பிப்ரவரி 21ம் தேதி முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்தில் நடிக்க இருப்பதால் விரைவில் முடிக்க தனுஷ் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

‘கொடி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக திரிஷா மற்றும் ஷாமிலி நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

 


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
கஷ்டங்களிலும் என்னுடன் இருந்தவர் இவர்தான் – தனுஷ் உருக்கம்!
அரசியல்வாதியாக நடித்தது புதிய அனுபவமாக இருந்தது: தனுஷ் பேட்டி
தனுஷின் கேரியரில் உச்சம் தொட்ட கொடி!
தீபாவளி ரேஸில் இணைந்த தனுஷின் கொடி!
தனுஷின் ‘கொடி’ தீபாவளியில் ரிலீஸ்!
தமிழ்நாட்டின் அணுமின் நிலையம் பிரச்சனையை கொடியில் பேசும் தனுஷ்!
கொடி படத்தில் வயதான அப்பாவாக நடிக்கும் தனுஷ்!
தனுஷின் கொடி ரிலீஸ் பிளான்!
கொடி படம் ரிலிஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions