தனுஷுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

Bookmark and Share

தனுஷுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

தனுஷ் நடித்து கடந்த வாரம் வெளிவந்த மாரி படத்தில் தனுஷ் தோன்றும் காட்சிகளில் எல்லாம் புகை பிடிப்பது பற்றி எச்சரிக்கை வாசகம் அப்படியே இருக்குமளவிற்கு படம் முழுவதும் புகை பிடித்துக் கொண்டேயிருந்தார்.

இது சம்பந்தமாக மாரி பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷிடம் கேட்ட போது கூட இனி அப்படி நடிக்க மாட்டேன் என்று அவர் சொல்லவேயில்லை. ரஜினிகாந்த், விஜய் கூட இனி அப்படி நடிக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்களே என்று கேட்டதற்குக் கூட, இயக்குனர்களின் படைப்பாக்கத்தில் நான் தலையிட மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

ஆனால், புகை பிடிக்கும் காட்சிகளை படத்தில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட சிகரெட் நிறுவனங்களே படத்தைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பணம் கொடுத்து அப்படிப்பட்ட காட்சிகளை வைக்கச் சொல்கிறார்கள் என முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அதோடு, தனுஷ் இனி புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இலங்கையில் கூட தனுஷின் புகை பிடிக்கும் காட்சிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

போன தலைமுறை ரஜினிகாந்த் ஸ்டைலாக புகை பிடிப்பதைப் பார்த்து தாங்களும் புகை பிடிக்கக் கற்றுக் கொண்டு சீரழிந்தது, இந்தத் தலைமுறை தனுஷ் போன்ற விடாப்பிடியான நடிகர்களின் குணத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது என சுகாதார ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

தனுஷ், இனி புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அறிவிக்காதவரை, அன்புமணி சொன்னது போல, அவர் சிகரெட் நிறுவனங்களிடமிருந்து பண உதவி பெறுகிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்பும் என்பது மட்டும் உறுதி.


Post your comment





Related News
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ்
மாரி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ்
நடிகர் தனுஷ் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த நட்சத்திரங்கள்
2017-ல் தனுஷின் மாரி 2 தொடங்குகிறது !
இணையத்தில் மாரி முதலாம் ஆண்டு கொண்டாட்டம்!
ஹீரோவான மாரி பட வில்லன்!
நாளை முதல் புது அவதாரம் எடுக்கும் தனுஷின் மாரி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions