நடிகர் தனுஷ் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த நட்சத்திரங்கள்

Bookmark and Share

நடிகர் தனுஷ் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த நட்சத்திரங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் இன்று தனது 33 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். தனுஷின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் தவிர சக நட்சத்திரங்களும் தனுஷிற்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆர்.ஜே.பாலாஜி கூறும்போது, புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம் மாதிரியான படங்களை தொடர்ந்து தரவேண்டும் என்று தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனுஷுடன் ‘கொடி’ படத்தில் நடித்துள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனுஷ் என்னும் மேஜிக்கை நான் என் கண்கள் வழியாக பார்த்துவிட்டேன். உங்களுடன் நடிக்கும்போது ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

இதுதவிர, நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் தனுஷுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். தனுஷ் தற்போது ‘வடசென்னை’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் இவரது பிறந்தநாளை கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ்
மாரி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ்
2017-ல் தனுஷின் மாரி 2 தொடங்குகிறது !
இணையத்தில் மாரி முதலாம் ஆண்டு கொண்டாட்டம்!
ஹீரோவான மாரி பட வில்லன்!
நாளை முதல் புது அவதாரம் எடுக்கும் தனுஷின் மாரி!
தனுஷுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions