பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ்

Bookmark and Share

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ்

செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்கள் 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குனர் பிரபு சாலமன் இயக்க தனுஷ் நடிக்கிறார்.

இப்படம் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகிறது. அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் ஜனரஞ்சங்கமான முறையில் இப்படம் உருவாகிறது.
 
மூன்றாம் பறை, கிழக்குவாசல், இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன் என அனைவராலும் பாராட்டப்பட்டு மத்திய மாநில விருதுகளை அள்ளிய படங்களை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தற்போது மைனா, கும்கி, கயல் போன்ற படங்களை இயக்கிய நட்சத்திர இயக்குனர் பிரபு சாலமன் இயக்க, தனது ஜனரஞ்சகமான நடிப்பின் மூலம் பெரும்பான்மையான ரசிகர்களையும் ஈர்த்து தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்.
 
செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இணை தயாரிப்பு ஜி. சரவணன் மற்றும் திருமதி செல்வி தியாகராஜன்.
 
இசையின் வெற்றிக் கூட்டணியான பிரபுசாலமன் – டி.இமான் இன்னும் பெரிடப்படாத இப்படத்தில் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

ஒளிப்பதிவு - வி. மகேந்திரன், படத்தொகுப்பு - தாஸ் (டான் மேக்ஸ்), நிர்வாக தயாரிப்பு – ராகுல்.
 
விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைப்பெற்று வருகிறது.


Post your comment





Related News
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்
கும்கி-2வில் நடிக்கும் ஹீரோயின் இவரா? பிரபல நடிகரின் மகள் அறிமுகம்
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
பாலைவனத்தில் உதயநிதியை இயக்க தயாராகும் பிரபு சாலமன்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?
அஜித் பட தயாரிப்பாளரால் பிரபு சாலமனுக்கு வந்த சோதனை!
தொடரி தோல்வியால் பிரபுசாலமன் எடுத்த அதிரடி முடிவு!
என் தகுதிக்கு மீறி பாராட்ட வேண்டாம்: தனுஷ் வேண்டுகோள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions