தனுஷ் படத்துக்காக ரயில் வண்டியை வாடகைக்கு எடுக்கிறார்கள்!

Bookmark and Share

தனுஷ் படத்துக்காக ரயில் வண்டியை வாடகைக்கு எடுக்கிறார்கள்!

கயல் படத்தை இயக்கிய பிரபுசாலமன் அடுத்தபடியாக தனுஷை வைத்து ஒரு மெகா படத்தை இயக்குகிறார். 25 கோடி பட்ஜெட்டில் அப்படம் தயாராகிறது. இதற்கு முன்பு அவர் இயக்கிய கயல் படம் 11 கோடி பட்ஜெட்டில் உருவானது.

ஆனால் அடுத்த படத்தில் தனுஷ் நடிப்பது மட்டுமின்றி அந்த கதைக்களத்துக்கு 25 கோடி தேவைப்படுகிறதாம். அதாவது, படத்தின் மொத்த கதையும் ரயிலில்தான் நடக்கிறதாம்.

குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் மாதவன்-ஷாலினி நடித்த அலைபாயுதே படத்தில் ரயில் எந்த அளவுக்கு முக்கியமானதாக இருந்ததோ அதைவிட இந்த படத்தில் ரயில் வண்டியில் நடக்கும் காட்சிகள் அதிகமாக உள்ளதாம்.

தனுஷ் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மட்டுமின்றி, கதை களத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் ரயில் பயணத்தின்போது நடப்பதால், ஒரு ரயிலையே இந்த படத்துக்காக வாடகைக்கு எடுக்கிறார்களாம்.

ஆனால் அந்த காட்சியை இந்தியாவில் உள்ள எந்த பகுதியில் நடத்துவது என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லையாம். கதாநாயகி தேடுவதோடு, லொகேசன் தேர்வையும் துரிதமாக நடத்திக்கொண்டிருக்கிறார் பிரபுசாலமன்.


Post your comment





Related News
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்
கும்கி-2வில் நடிக்கும் ஹீரோயின் இவரா? பிரபல நடிகரின் மகள் அறிமுகம்
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
பாலைவனத்தில் உதயநிதியை இயக்க தயாராகும் பிரபு சாலமன்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?
அஜித் பட தயாரிப்பாளரால் பிரபு சாலமனுக்கு வந்த சோதனை!
தொடரி தோல்வியால் பிரபுசாலமன் எடுத்த அதிரடி முடிவு!
என் தகுதிக்கு மீறி பாராட்ட வேண்டாம்: தனுஷ் வேண்டுகோள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions