ரஜினிகாந்தை நெருங்கவுள்ளார் தனுஷ்!

Bookmark and Share

ரஜினிகாந்தை நெருங்கவுள்ளார் தனுஷ்!

ரஜினிகாந்தின் வெற்றியையும், வசூலையும், அவருடைய சாதனையும் எந்த ஒரு தமிழ் நடிகராவது நெருங்குவாரா என்பது சந்தேகம்தான். ஆனால், ரஜினியின் ஒரு சாதனையை அவருடைய மாப்பிள்ளையான தனுஷ் நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் 2 மில்லியன் தொடர்பாளர்களை தனுஷ் நேற்று பெற்றுள்ளார்.தமிழ் நடிகர்களில் ரஜினிகாந்த் தான் இதுவரை 2 மில்லியன் தொடர்பாளர்களைப் பெற்றவராக இருந்தார். அவருக்கு இதுவரை 20 லட்சத்து 26 ஆயிரம் தொடர்பாளர்கள் உள்ளனர். 

அவருக்கு அடுத்து தனுஷ் 20 லட்சம் தொடர்பாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இன்னும் 26 ஆயிரம் தொடர்பாளர்களைப் பெற்றால் ரஜினிகாந்த் சாதனையை தனுஷ் முறியடித்து விடுவார்.

இன்றைய இணைய உலகில் சமூக வலைத்தளங்களின் செயல்பாடு வளர்ந்திருந்தாலும் சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

அவர்களில் தனுஷும் குறிப்பிடத்தக்கவர். 2010ம் ஆண்டு டிவிட்டர் வலைத்தளத்தில் இணைந்த தனுஷ் ஐந்து ஆண்டு காலத்திற்குள் 20 லட்சம் தொடர்பாளர்களைப் பெற்றுள்ளார். ஆனால், ரஜினிகாந்த் ஒரு சில மாதங்களிலேயே 20 லட்சம் தொடர்பாளர்களைப் பெற்றார்.

தனுஷ் போன்ற நடிகர்கள் தங்களைப் பற்றிய எந்த ஒரு தகவலையும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே அதிகம் வெளிப்படுத்தி வருகிறார்கள். 2 மில்லியன் தொடர்பாளர்களைப் பெற்றது குறித்து “அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. உங்களைப் பெருமைப்படுத்தும் அளவிற்கு என்னால் முடிந்தவற்றைச் செய்வேன்,” என தனுஷ் டிவீட்டியுள்ளார்.


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
தனுஷிற்கு ஷாக் கொடுத்த ரஜினிகாந்த்
'இந்த' விஷயத்தில் மாமா ரஜினி வழியே மாப்பிள்ளை தனுஷ் வழி
தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்
தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்க இதுதான் காரணம் – உண்மையை சொன்ன ஐஸ்வர்யா தனுஷ்!
தனுஷ்-ரஜினி இடையே மோதல்….
ரஜினி எனும் கடவுளோடு என்னை ஒப்பிடாதீர்கள்: தனுஷ்
ரஜினிகாந்த்தை \'ஓவர் டேக்\' செய்வாரா தனுஷ்...?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions