தனுஷை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ரோபோ ஷங்கர்!

Bookmark and Share

தனுஷை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ரோபோ ஷங்கர்!

சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர் ரோபோ ஷங்கர். அவரது காமெடி காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகனை வெகுவாக கவர்ந்து விட்டதாம்.

அதனால் அதன்பிறகு மம்முட்டியின் மகன் துல்கர்சல்மானை வைத்து தான் இயக்கிய வாய்மூடி பேசவும் என்ற படத்தில் அவரை ஷோலோ காமெடியனாக களமிறங்கினார் பாலாஜி மோகன்.

அதற்கடுத்து தனுஷை வைத்து தான் இயக்கியுள்ள மாரி படத்திலும் படம் முழுக்க தனுசுடன் இணைந்து நடிக்கும் காமெடியனாக ரோபோ ஷங்கரை நடிக்க வைத்துள்ளார் பாலாஜி மோகன்.

அதனால் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு சினிமாவில் ஒரு இடம் பிடித்து விட வேண்டும் என்று நிறைய ஹோம்ஒர்க் செய்து காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறாராம் ரோபோ ஷங்கர்.

அந்த வகையில், சீன் பை சீன் தனுசுடன் கலக்கியிருக்கும் அவரது நடிப்பைப்பார்த்து பல நேரங்களில் விழுந்து விழுந்து சிரித்தாராம் தனுஷ். அதிலும் உங்களது காமெடியில் ஒரு தனித்துவம் உள்ளது. இதை இப்படியே தொடருங்கள்.

தமிழ் சினிமாவில் உங்களுக்கு ஒரு இடம் கிடைத்து விடும் என்றாராம் தனுஷ். விளைவு மாரி படத்தில் அதிக நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் நடித்துள்ள ரோபோ ஷங்கர், மாரி படத்தின் ரிலீசை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார். <


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions