தனுஷ் - சமந்தா இடையில் புதிய கெமிஸ்ட்ரி

Bookmark and Share

தனுஷ் - சமந்தா இடையில் புதிய கெமிஸ்ட்ரி

கதாநாயக நடிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான நடிகையை தனக்கு ஜோடியாக்கும்படி தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் சிபாரிசு செய்வது புதிய விஷயமில்லை. தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே திரைத்துறையில் நடந்து வரும் விஷயம்தான் இது.

என்றாலும், யாராவது ஒரு கதாநாயக நடிகர், தனக்கு ஜோடியாக இந்த நடிகையை புக் பண்ணுங்கள் என்று சொல்லும்போது அது செய்தியாவதை தவிர்க்கவே முடியாது.இப்படி நடிகைகளுக்கு சிபாரிசு செய்த எத்தனையோ நடிகர்கள் கடந்த காலத்தில் செய்தியாகி இருக்கிறார்கள்.

அதையும் தாண்டி பல நடிகர்கள் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி இருக்கிறார்கள். அப்படி கிசுகிசுவில் சிக்கிய நடிகர்கள் பின்னர் சிபாரிசு செய்த நடிகையையே காதலித்து கல்யாணமும் செய்திருக்கின்றனர். இதற்கு இப்படி ஒரு முன்னுரை? எல்லாம் காரணமாகத்தான்...! விஜய் வசந்தின் கேர்ள் ப்ரண்டாக திரைத்துறையினருக்கு அறிமுகமான சமந்தா பின்னர் நம்பர் ஒன் கதாநாயகியாகிவிட்டார்.

விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் சமந்தா, தற்போது தனுஷ் உடன் விஐபி 2 படத்தில் நடித்து வருகிறார். வேல்ராஜ் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நேரத்தில் தனுஷ், சமந்தா இருவரும் க்ளோஸ் ப்ரண்ட்ஸாகிவிட்டனர்.

எனவே விஐபி-2 படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்துக்கும் சமந்தாவையே கதாநாயகியாக சிபாரிசு செய்திருக்கிறார் தனுஷ். 


Post your comment





Related News
திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!
தனுஷ், நயன்தாரா இடையே சண்டை: இது சமந்தாவுக்கு ரொம்ப நல்லதாப் போச்சு
மூன்றாவது முறையாக தனுஷுடன் நடிக்கும் சமந்தா!
இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது தங்கமகன் டிரெய்லர்!
இணையத்தில் வெளிவந்த 'தங்க மகன்' படத்தின் கதை
தனுஷ் படத்துக்காக வெயிட் போட்ட சமந்தா!
இது \'விஐபி 2\' குடும்பம்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions