தனுஷ் படத்துக்காக வெயிட் போட்ட சமந்தா!

Bookmark and Share

தனுஷ் படத்துக்காக வெயிட் போட்ட சமந்தா!

சமந்தா திரையில்தான் ஓரளவு உடல்கட்டு இருப்பது போன்று தெரிவார். ஆனால் நேரில் பார்த்தால் ரொம்பவே ஒல்லிக்குச்சியாக இருக்கிறார். ஆனால் இன்னும் உடம்பு பெருத்தால் திரையில் ரொம்ப குண்டாக தெரிவாராம்.

அதன்காரணமாகவே வெயிட் போடும் எந்த உணவுகளையும் அவர் எடுத்துக்கொள்வதில்லையாம். அதேசமயம், அஞ்சான், கத்தி படங்களில் நடித்தபோது தெலுங்கு படங்களில் நடித்தபோது இருந்த மாதிரியே உடம்பை வைத்திருந்தவர் இப்போது வேலையில்லா பட்டதாரி 2-ம் பாகத்திற்காக சற்று எடை போட்டிருக்கிறார் சமந்தா.

காரணம், இந்த படத்தில் அவர் தனுஷின் மனைவியாக நடிக்கிறார். குடும்ப பெண் என்பதால் இந்த கதாபாத்திரத்திற்காக புடவை கெட்டப்பில் நடித்து வரும் சமந்தா, சற்று உடம்பு இருந்தால்தான் புடவையில் அழகாக தெரிவோம் என்பதற்காக வழக்கத்தை விட எக்ஸ்ட்ராவாக சில உணவுகளை எடுத்துக்கொண்டு தற்போது பூசினாற் போன்று வெயிட் போட்டிருக்கிறார்.  

ஆனால் இதையே தொடர மாட்டாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தனது வழக்கமான ஒல்லிக்குச்சி கெட்டப்புக்கு மாறி விடுவாராம் சமந்தா.


Post your comment





Related News
திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!
தனுஷ், நயன்தாரா இடையே சண்டை: இது சமந்தாவுக்கு ரொம்ப நல்லதாப் போச்சு
மூன்றாவது முறையாக தனுஷுடன் நடிக்கும் சமந்தா!
இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது தங்கமகன் டிரெய்லர்!
இணையத்தில் வெளிவந்த 'தங்க மகன்' படத்தின் கதை
தனுஷ் - சமந்தா இடையில் புதிய கெமிஸ்ட்ரி
இது \'விஐபி 2\' குடும்பம்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions