தனுஷ் படித்த பள்ளியில் படப்பிடிப்பு!

Bookmark and Share

தனுஷ் படித்த  பள்ளியில் படப்பிடிப்பு!

சென்னை கே.கே.நகரில் உள்ள தாய் சத்யா பள்ளிக்கூடத்தில்தான் படித்தார் தனுஷ். சினிமாக்காரர்களின் பிள்ளைகள் எல்லாம் பிரபலமான பள்ளிக் கூடங்களில் படித்த காலத்தில், எளிய மக்கள் படிக்கும் பள்ளிக்கூடமாக விளங்கிய தாய் சத்யா பள்ளியில் படித்தார் தனுஷ். எம்.ஜி.ஆரின் உறவினர்கள் நடத்தும் இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் எல்கேஜி முதல் 10 ஆம் வகுப்புவரை படித்தார்.

அப்போது தனுஷின் (ஒரிஜினல்) பெயர் வெங்கட் பிரபு. தாய் சத்யா பள்ளிக் கூடத்தில் நன்றாகப் படிக்கும் மாணவர்களில் ஒருவராக விளங்கினார்.

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு அவரே எதிர்பாராதவகையில் நடிகரானார். நடிகரான பிறகு தன் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் தாய் சத்யா பள்ளிக் கூடத்துக்கு சென்று தனக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியைகளிடம் ஆசி வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

வேலையில்லா பட்டதாரி இயக்குநர் வேல்ராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது தனுஷ் படித்த தாய் சத்யா பள்ளியிலேயே நடைபெறுகிறது. தனுஷ் உடன் படித்த அவரது நண்பர் தற்போது வேல்ராஜிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions