`பவர்பாண்டி' படத்தின் ஆன்மாவே ஷான் ரோல்டனின் இசைதான்: தனுஷ்

Bookmark and Share

`பவர்பாண்டி' படத்தின் ஆன்மாவே ஷான் ரோல்டனின் இசைதான்: தனுஷ்

நடிகர் தனுஷ் முதன் முறையாக இயக்குனராக களமிறங்கும் படம் `பவர்பாண்டி'. `ப. பாண்டி' என்று பெயர் மாற்றம்  செய்யப்பட்டுள்ள இப்படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு, நடிகர் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் நடிகை  ரேவதி, பிரசன்னா, சாயா சிங், செண்ட்ராயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

நேற்று இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்ட படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. அதில் இப்படத்தின் இயக்குநர் தனுஷ்  கூறியதாவது,

உலகத்தில் நம் வாழ்க்கையில் அன்பு, நிம்மதி, பாசம், கோபம் என்ற பல விஷயங்கள் நம்மைச் சுற்றி உள்ளன. இதில்  பாஸிட்டிவ் விஷயங்கள் அதாவது நன்மையான விஷயங்களை மட்டுமே எடுத்து கொள்வது தான் இந்த ப.பாண்டி திரைப்படம். 

இயக்குனர் பாலுமகேந்திரா எப்போதும் ஒரு விஷயத்தை நம்புவார். அதாவது, ஒரு படம் தனக்கு தேவையான விஷயங்களை  தானே எடுத்துக் கொள்ளும், அப்படி எடுத்துக் கொள்ளாத படங்கள் தான் தோல்வியை சந்திக்கின்றன என்று அவர் கூறுவார். 

அந்தவகையில், `ப.பாண்டி' தனக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அதுவாகவே தேடிக்கொண்டது. இவ்வாறகவே  இப்படத்தின் பவர்பாண்டியும் (ராஜ்கிரண்) எங்களுக்கு கிடைத்தார் என்றார். 

மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றி தனுஷ் கூறும்போது, இப்படத்தின் ஆன்மாமே ஷான் ரோல்டனின் இசைதான்,  எனது எண்ணமும் அவரது எண்ணமும் ஒரே திசையில் பயணித்ததே இப்படத்தின் இசை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்.  என்று கூறினார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions