தனுஷ் தயாரிப்பில் சிம்பு!

Bookmark and Share

தனுஷ் தயாரிப்பில் சிம்பு!

சினிமாவில் ஹீரோவாக களமிறங்கிய தனுஷ், சமீபகாலமாக பல முகம் காட்டி வருகிறார். குறிப்பாக, வுண்டர் பார் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி அதில் தான் நடிக்கிற படங்கள் மட்டுமின்றி மற்ற ஹீரோக்களை வைத்தும் படம் தயாரித்து வருகிறார்.

அந்த வகையில், தான் நடித்த 3, வேலையில்லா பட்டதாரி, மாரி ஆகிய படங்களை தயாரித்த தனுஷ், தற்போது வேலையில்லா பட்டதாரி-2, சூதாடி ஆகிய படங்களையும் தயாரித்து நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதேநேரம், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களை தயாரித்தவர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தையும் தயாரித்தார். தொடர்ந்து விஜயசேதுபதி நடிப்பில் நானும் ரவுடிதான், தினேஷ் நடிப்பில் விசாரணை ஆகிய படங்களையும் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், நல்ல கதைகள் கிடைத்தால் அதற்கு பொருத்தமான ஹீரோக்களை வைத்து படம் தயாரித்து வரும் தனுசுக்கு, தனது நண்பரான சிம்புவை வைத்தும் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.

சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விருது விழாவில் அதை தெரிவித்த தனுஷ், சிம்புவுக்கேற்ற கதையை தேடிக்கொண்டிருக்கிறாராம்.


Post your comment





Related News
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அந்த நடிகரின் பாட்டுக்கு மட்டும் ஆடமாட்டேன்! சிம்புவுக்காக மற்றொரு நடிகரை அசிங்கப்படுத்திய மஹத்
தனுஷ் மீது மீண்டும் சிம்புவின் பார்வை!
தனுஷ் ஒரு பச்சோந்தி; சிம்பு சோம்பேறி – வெளுத்து வாங்கிய கௌதம்!
தனுஷுடன் துணிந்து மோதும் சிம்பு!
11 ஆண்டுகள் கழித்து மோதும் தனுஷ், சிம்பு
ஒரே நாளில் மோதும் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்
அனேகன் \'வெற்றி\'யைக் கொண்டாடிய தனுஷ், சிம்பு, கேவி ஆனந்த்
தனுஷ் - சிம்பு...சபாஷ் சரியான போட்டி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions