அனேகன் 'வெற்றி'யைக் கொண்டாடிய தனுஷ், சிம்பு, கேவி ஆனந்த்

Bookmark and Share

அனேகன் 'வெற்றி'யைக் கொண்டாடிய தனுஷ், சிம்பு, கேவி ஆனந்த்

நேற்றுதான் தனுஷ் நடித்த அனேகன் படம் வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் படம் தாறுமாறான வெற்றி என்று அறிவித்துள்ள தனுஷ், அதற்காக தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து நேற்று இரவே வெற்றி விருந்து அளித்துவிட்டார்.

கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் 700 க்கும் அதிகமான அரங்குகளில் நேற்று வெளியானது.படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வர ஆரம்பித்த நிலையில், இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியைக் கொண்டாட நேற்று இரவு வெற்றி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் தனுஷ். இதில் சிம்பு, இயக்குநர் கேவி ஆனந்த் மற்றும் தனுஷின் நண்பர்கள் பங்கேற்று கொண்டாடினர்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions