ஒரே நாளில் மோதும் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்

Bookmark and Share

ஒரே நாளில் மோதும் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்

இதோ வருகிறது, அதோ வருகிறது என்று வெளியீட்டுத் தேதியை வால் போல நீட்டிக் கொண்டே சென்ற வாலு படம் ஒரு வழியாக ஜுலை 17ம் தேதி கண்டிப்பாக வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியீடு என்ற விளம்பரத்துடன் வந்திருப்பதால் அதை ஓரளவிற்கு நம்பலாம் என்கிறார்கள் கோலிவுட்டில். 

ஆனால், ஜுலை 17ம் தேதி இப்படி ஆளாளுக்கு மோதிக் கொண்டால் எங்கே தியேட்டர்கள் கிடைக்கப் போகிறது என்றும் சொல்கிறார்கள். ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன், தனுஷ் நடிக்கும் மாரி ஆகிய படங்கள் ஜுலை 17ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இப்போது வாலு படமும் அந்தப் பட்டியலில் சேர்ந்து கொண்டால் எப்படி தியேட்டர்கள் கிடைக்கும் என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள்.

அதோடு ஜுலை 10ம் தேதி பாகுபலி படமும் வெளிவர உள்ளது. ஜுலை 3ம் தேதி பாபநாசம் படமும் வெளிவருகிறது என்கிறார்கள். எப்படியும் இந்தப் படங்கள் ஜுலை 17ம் தேதி வரை தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அப்படியிருக்க ஒரே நாளில் முக்கியமான மூன்று இளம் நடிகர்கள் மோதிக் கொள்ளும் படங்கள் போட்டி போட்டால் ஒரு படத்தால் மற்ற படங்களின் வசூல் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

முதன் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படம்தான் ஜுலை 17ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் மற்ற படங்களையும் அறிவித்தார்கள். இதனிடையே தேசிய விருது பெற் குற்றம் கடிதல் படமும் ஜுலை 17ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு முனைப் போட்டியில் மேலும் சில படங்கள் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions