சிம்பு படத்தை தொடர்ந்து தெலுங்கில் ரிலீசாகும் தனுஷ் படம்

Bookmark and Share

சிம்பு படத்தை தொடர்ந்து தெலுங்கில் ரிலீசாகும் தனுஷ் படம்

தனுஷ் இயக்கத்தில் `ப பாண்டி' (பவர்பாண்டி) படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `எனை நோக்கி பாயும் தோட்டா' படம் மே மாதம் ரிலீசாகவிருப்பதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் `வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாவது பாகத்திலும் தனுஷ் நடித்து முடித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை' படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். 

பின்னர் ‘மாரி-2’ படத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பங்கேற்க உள்ளதாகவும், கார்த்திக் சுப்பாராஜ் உடன் இணையவிருக்கும் படம் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் ஹாலிவுட்டில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் - ரிச்சா கங்கோபாத்யா நடிப்பில் கடந்த 2011-ல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் `மயக்கம் என்ன'. இப்படம் தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `இது நம்ம ஆளு' படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக இரு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், `மயக்கம் என்ன' படமும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தமிழ் சமூகம் என்னை சந்தேகப்படலாமா? கவிஞர் வைரமுத்து வேதனை
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
சூர்யா பற்றிய விமர்சனம் - தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளினிகள்: ரசிகர்கள் கொந்தளிப்பு
மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகள் தான் - விஷால்
கலகலப்பு-2... இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் - மனம்திறந்த சுந்தர்.சி
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions