சிவகார்த்திகேயனுடன் மோதலா?: தனுஷ் பேட்டி

Bookmark and Share

சிவகார்த்திகேயனுடன் மோதலா?: தனுஷ் பேட்டி

நடிகர் தனுஷ், டைரக்டர் வெற்றிமாறன் இணைந்து தயாரித்து, தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் தனுஷ் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

‘காக்கா முட்டை’ படத்தை தயாரிப்பதற்கு முன்பு அந்த படத்தின் கதையை படிக்க விரும்பினேன். அப்போது நான் டெல்லியில் இருந்தேன். டைரக்டர் மணிகண்டன் அந்த கதையை கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார். 10 பக்கத்தை படித்ததுமே எனக்கு பிடித்துவிட்டது. இந்த கதையை படமாக தயாரிப்பது என முடிவு செய்தேன். கதை அவ்வளவு சிறப்பாக இருந்தது. இந்த படத்தை டைரக்டர் வெற்றிமாறனுடன் இணைந்து தயாரித்ததில் மகிழ்ச்சி. படம் பார்த்தபோது எனக்கு என் சிறுவயது பருவம் நினைவுக்கு வந்தது.

எனக்கும், என் அண்ணன் செல்வராகவனுக்கும் ஏற்பட்ட அனுபவங்கள் நினைவுக்கு வந்தன. சின்ன காக்கா முட்டையாக நானும், பெரிய காக்கா முட்டையாக என் அண்ணனும் தெரிந்தது. இந்த படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

படத்தில் நடித்த விக்னேஷ், ரமேஷ் ஆகிய 2 சிறுவர்களும் கதாபாத்திரமாக வாழ்ந்திருந்தார்கள். நடிப்பு என்றால் அப்படி இருக்கவேண்டும். தேசிய விருதுகள் மூலம் அவர்களுக்கு கிடைத்த பாராட்டுகள் அனைத்தும் நியாயமானவை. அவர்களைபோல என்னால் நடிக்க முடியாது.

எதார்த்தமாக நடிப்பது எப்படி? என்பதை அந்த 2 சிறுவர்களிடம் இருந்தும் கற்றுக்கொண்டேன்.

‘காக்கா முட்டை’ வியாபார ரீதியிலான சினிமாவின் இன்னொரு முகமாக இருக்கும். இந்த படத்தின் மூலம் எங்களுக்கு லாபம் கிடைக்கும். தேசிய விருது பெற்ற 2 சிறுவர்களின் படிப்பு செலவை நாங்களே ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்திருக்கிறோம்.

இவ்வாறு தனுஷ் பேசினார்.

தனுஷிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- உங்களுக்கு ‘காக்கா முட்டை’ போன்ற குறைந்த பட்ஜெட் படத்தை தயாரிப்பதில் சந்தோஷமா? அல்லது சிவகார்த்திகேயனை வைத்து ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிசட்டை’ போன்ற பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்ததில் சந்தோஷமா?

பதில்:- ‘காக்கா முட்டை’ படத்தை தயாரித்ததில் திருப்தி. சிவகார்த்திகேயனை வைத்து ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிசட்டை’ படங்களை தயாரித்ததில் சந்தோஷம்.

கேள்வி:- உங்களுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறதாமே? ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் உள்ளே வந்தபோது, அவரை பார்த்ததும் நீங்கள் வெளியேறிவிட்டீர்களாமே?

பதில்:- எனக்கும், சிவகார்த்திகேயனுக்கும் எந்த மோதலும் இல்லை. நாங்கள் இருவரும் அண்ணன்-தம்பியாக பழகி வருகிறோம்.

மேற்கண்டவாறு தனுஷ் பதிலளித்தார்.

விழாவில், ‘காக்கா முட்டை’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டைரக்டர் வெற்றிமாறன், டைரக்டர் மணிகண்டன், தேசிய விருதுபெற்ற சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ், நடிகை ஐஸ்வர்யா ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள். 


Post your comment





Related News
தனுஷ், சிவகார்த்திகேயனை விட விஜய் சேதுபதி தான் டாப்பு- எப்படி தெரியுமா?
இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய திரை பிரபலங்கள்!
தனுஷ் பட வசனத்தை பாடல் வரியாக்கிய சிவகார்த்திகேயன்!
தனுஷ் படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் பட விநியோகஸ்தர்!
தனுஷுடன் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்
கமலின் பாபநாசம் - சிவ கார்த்திகேயன், தனுஷ் போட்டியை சமாளிக்குமா?
தனுஷ், சிவகார்த்திகேயன் நேரடி மோதல்...!
சிவ கார்த்திகேயனை தவிர்த்த தனுஷ்
தனுஷுடன் மோதலா? சிவகார்த்திகேயன் மறுப்பு
தனுஷிடமே விளையாடும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions