தனுஷிடமே விளையாடும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

Bookmark and Share

தனுஷிடமே விளையாடும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

மற்றவர்களுக்காக உதவி செய்து அவர்களை வளர்த்துவிடும் போது, பின்னர் அவர்களை ஏன்தான் இப்படி வளர்த்து விட்டோமோ என என்றாவது ஒரு நாள் யோசிக்க வைத்து விடும்.

உதவி செய்த பலரும் நன்றி மறப்பது இந்தக் காலத்தில் இருந்து வரும் ஒன்றுதான். எங்கே சிவகார்த்திகேயனையும் அப்படிப்பட்ட வரிசையில் அவருடைய ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தள்ளி விடுவார்களோ தெரியவில்லை.

சில தினங்களுக்கு முன் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம் குறித்து தனுஷ் அவருடைய டிவிட்டரில் “அண்ணா செல்வராகவன், தம்பி சிம்பு” என்று குறிப்பிட்டிருந்தார்.

தனுஷுக்கும் சிம்புவுக்கும் ஒரு காலத்தில் இருந்த பகை எப்படி, பின்னர் திடீரென அவர்கள் நட்பாக ஆரம்பித்தது எப்படி என்று ரசிகர்களுக்கும் தெரியும். இப்போது இருவரும் ’அண்ணா.....தம்பி....’ என பாசமழை பொழிவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனை நாட்களாக சிவகார்த்திகேயனைத்தான், தனுஷ் தம்பி தம்பி என சொல்லிக்கொண்டு இருந்தார்... இப்போது திடீரென சிம்புவை தம்பி என்று அழைத்திருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சிவகார்த்திகேயனின் சில குறும்பு ரசிகர்களில் ஒருவர், சிவகார்த்திகேயனை உங்கள் மொபைல் போனில் எப்படி குறிப்பிட்டு வைத்துள்ளிர்கள் எனக் கேட்டிருக்கிறார்.

அதற்கு ’தம்பி’ என  பதிலளித்திருக்கிறார் தனுஷ். போகிற போக்கைப் பார்த்தால் தனுஷையும், சிவகார்த்திகேயனையும் பிரிக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது. ’அலர்ட்’ஆ இருந்துக்குங்க சிவா....! 


Post your comment





Related News
தனுஷ், சிவகார்த்திகேயனை விட விஜய் சேதுபதி தான் டாப்பு- எப்படி தெரியுமா?
இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய திரை பிரபலங்கள்!
தனுஷ் பட வசனத்தை பாடல் வரியாக்கிய சிவகார்த்திகேயன்!
தனுஷ் படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் பட விநியோகஸ்தர்!
தனுஷுடன் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்
கமலின் பாபநாசம் - சிவ கார்த்திகேயன், தனுஷ் போட்டியை சமாளிக்குமா?
தனுஷ், சிவகார்த்திகேயன் நேரடி மோதல்...!
சிவகார்த்திகேயனுடன் மோதலா?: தனுஷ் பேட்டி
சிவ கார்த்திகேயனை தவிர்த்த தனுஷ்
தனுஷுடன் மோதலா? சிவகார்த்திகேயன் மறுப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions