தனுஷுடன் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்

Bookmark and Share

தனுஷுடன் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவருடைய படங்கள் அனைத்துமே வெற்றிப்பட வரிசையில் வந்து கொண்டிருக்கிறது. இவருடைய இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு தனுஷ்தான் முக்கிய காரணம். தன்னுடைய படத்தில் அவரை அறிமுகம் செய்து வைத்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய தயாரிப்பில் அவரை நடிக்கவும் வைத்து அழகு பார்த்தவர் தனுஷ்.

அப்படியிருக்கையில், சமீபகாலமாக சிவகார்த்திகேயனுக்கும், தனுஷூக்கும் மோதல் போக்கு நிலவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. சிவகார்த்திகேயனுக்கு உதவ தனுஷ் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. அதனாலேயே சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு சக போட்டியாளராக கருதும் விஜய் சேதுபதியை வைத்து தனுஷ் படம் தயாரிக்கிறார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இவற்றையெல்லாம் சிவகார்த்திகேயன் தற்போது மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, தனுஷ் எனக்கு முக்கியமான காலகட்டத்தில் எல்லாம் நிறைய உதவிகள் செய்துள்ளார். அதையெல்லாம் நான் மறக்கமுடியாது. அவர் எப்போதும் என் இதயத்தில் குடியிருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புகூட, நாங்கள் இருவரும் கிரிக்கெட் விளையாடினோம். அவர்மீது நான் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்று அவருக்கு தெரியும். அதேபோல், நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கமாட்டேன் என்பதும் அவருக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
தனுஷ், சிவகார்த்திகேயனை விட விஜய் சேதுபதி தான் டாப்பு- எப்படி தெரியுமா?
இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய திரை பிரபலங்கள்!
தனுஷ் பட வசனத்தை பாடல் வரியாக்கிய சிவகார்த்திகேயன்!
தனுஷ் படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் பட விநியோகஸ்தர்!
கமலின் பாபநாசம் - சிவ கார்த்திகேயன், தனுஷ் போட்டியை சமாளிக்குமா?
தனுஷ், சிவகார்த்திகேயன் நேரடி மோதல்...!
சிவகார்த்திகேயனுடன் மோதலா?: தனுஷ் பேட்டி
சிவ கார்த்திகேயனை தவிர்த்த தனுஷ்
தனுஷுடன் மோதலா? சிவகார்த்திகேயன் மறுப்பு
தனுஷிடமே விளையாடும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions